’வார இறுதியில் இலவச சேவை’ வாடிக்கையாளர்களை கவர நெட்ப்ளிக்ஸ் புதிய திட்டம்!

Netflix-is-offering-a-free-weekend-service-in-India

இன்றைய இணைய உலகில் OTT தளங்களில் முன்னணியில் இருக்கின்ற நிறுவனங்களில் நெட்ப்ளிக்ஸும் ஒன்று. 


Advertisement

image

வெப் சீரிஸ், திரைப்படம் என பொழுதை இனிதாக கழிக்க இதில் ஏராளமான ஆப்ஷன்கள் உள்ளன. அதற்காகவே பெருவாரியான பயனர்கள் நெட்ப்ளிக்ஸை சப்ஸ்க்ரைப் செய்தும் உள்ளனர்.


Advertisement

இந்நிலையில் ஏதேனும் ஒரு வார இறுதியில் நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் தனது சேவையை இலவசமாக வழங்க திட்டமிட்டுள்ளது. இந்த சேவை இந்தியாவிலிருந்து ஆரம்பிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.

அதனை நெட்ப்ளிக்ஸ் நிறுவனத்தின் CHIEF PRODUCT OFFICER கிரெக் பீட்டர்ஸ் உறுதி  செய்துள்ளார்.

image


Advertisement

“புதிய பார்வையாளர்களை கவரும் வகையில் ஒரு புதுமையான முயற்சியாக இதனை  மேற்கொள்ள  திட்டமிட்டுள்ளோம். இதன் மூலம் எங்களிடம் உள்ள அற்புதமான கதைகள், எங்களது சேவை மற்றும் அதன் பயன்பாடு முதலியவற்றை அவர்கள் அறிந்து கொள்ள  உதவும். அதே  சமயத்தில் புதிய வாடிக்கையாளர்களை எங்கள் தளத்தில் SIGN UP செய்யவும் உதவும்” என அவர்  தெரிவித்துள்ளார்.

image

இந்த இலவச சேவையை எப்போது வழங்க உள்ளது என்பதை நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் விரைவில் அறிவிக்கும்  என எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்கா தவிர்த்து இந்தியா உட்பட உலக சந்தையில் நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் 30 நாட்கள் இலவச டிரையல் சேவையை வழங்கி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. அதனுடன் சேர்த்தே இந்த வார இறுதி நாட்களுக்கான இலவச சேவை இருக்கலாம் எனவும் சொல்லப்படுகிறது.  

 

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement