லோகேஷ் - கமல் படம்.. எப்போது படப்பிடிப்பு..?

the-shooting-of-Kamal-Haasan-232-is-all-set-to-begin-by-the-end-of-November

தமிழ் சினிமாவின் புதுமுக இயக்குநர்களில் நம்பிக்கைக்குரிய பெயராக இருப்பவர் லோகேஷ் கனகராஜ். கார்த்தி நடித்த கைதி படத்திற்குப் பிறகு அவரது கிராஃப் எகிறியது. விஜய் நடித்துள்ள மாஸ்டர் படம் வெளியாகவுள்ள நிலையில், புதிய படத்தில் கமலுடன் இணைவதாக லோகேஷ் கனகராஜ் ட்விட்டரில் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.


Advertisement

image

ராஜ்கமல் இண்டர்நேஷனல் தயாரிக்கும் கமல் படத்தை அவர் இயக்குகிறார். தனது முதல் இரண்டு படங்களிலும் ரசிகர்களை கவர்ந்த லோகேஷ் கனகராஜின் எதிர்வரும் படங்களுக்காகவும் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். குறிப்பாக கமலுடன் லோகேஷ் இணைந்திருப்பது மேலும் எதிர்பார்ப்பை எகிறவைத்துள்ளது. இந்நிலையில் விரைவில் படக்குழுவினர் குறித்து அறிவிப்பு வெளியாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.


Advertisement

மேலும் நவம்பர் மாத இறுதியில் படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. படத்தின் ஒளிப்பதிவாளர் சத்யன் சூர்யனாகவும், பிலோமின் ராஜ் எடிட்டராக இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement