கேரள தங்கக் கடத்தல் வழக்கில் தொடர்புடையதாக கருதப்படும் முதலமைச்சரின் முன்னாள் முதன்மைச் செயலாளர் சிவசங்கரனுக்கு முன் ஜாமீன் வழங்க சுங்கத்துறை கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
சிவசங்கரனின் முன் ஜாமீன் மீது நாளை மறுநாள் விசாரனை நடைபெறவுள்ள நிலையில், சுங்கத்துறை சார்பில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.அதில் சுங்கத்துறை வழக்குகளில் முன் ஜாமீன் மனுக்களை விசாரிக்கவோ, தடைவிதிக்கவோ உயர்நீதிமன்றங்களுக்கு அதிகாரம் இல்லை என வாதிடப்பட்டிருந்தது. மேலும் உடல்நலக்குறைவு என சிவசங்கரன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதும் ஒரு நாடகம் எனக் கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையில் இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் ஸ்வப்னா சுரேஷ், அமலாக்கத்துறையிடம் அளித்த வாக்குமூலத்தில் சிலப் பகுதிகள் வெளியாகி உள்ளன. அதில் தனக்கு கேரள முதல்வர் பினராயி விஜயனுடன் நெருங்கிய தொடர்பு இல்லை என்றும், சில விஷயங்களுக்காக மட்டும் பேசியதாக ஸ்வப்னா சுரேஷ் கூறியதாகத் தெரிகிறது. தனது தந்தை மறைவுக்கு முதல்வர் தொலைபேசியில் அழைத்து ஆறுதல் தெரிவித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மற்றொரு முக்கியக் குற்றவாளியாக கருதப்படும் சரித்குமார் அளித்த வாக்குமூலத்தில் கேரள உயர்கல்வித்துறை அமைச்சர் ஜலீலும், தேவஸ்வம்போர்டு அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரனும் பல முறை ஐக்கிய அரபு அமீரகத்தின் திருவனந்தபுரம் தூதரகத்திற்கு சென்றுள்ளதாக கூறியுள்ளார். அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் தனது மகனின் வெளிநாட்டு வேலை விஷயமாக அடிக்கடி தூதரகத்திற்கு சென்றதாகவும் சரித்குமர் தனது வாக்குமூலத்தில் கூறியுள்ளார். சிவசங்கரன் தலையிட்டதால்தான் ஸ்வப்னாவிற்கு கேரள அரசின் தகவல் தொழிநுட்பத்துறையில் வேலை கிடைத்தது என சரித்குமார் தனது வாக்கு மூலத்தில் கூறியதாகத் தெரிகிறது.
Loading More post
குடல் இறக்க அறுவை சிகிச்சை முடிந்து முதல்வர் பழனிசாமி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்!
முக்கியச் செய்திகள்: அச்சுறுத்தும் கொரோனா 2-ம் அலை முதல் சென்னை அணியின் வெற்றி வரை
தடுப்பூசி குறித்த சர்ச்சை கருத்து - மன்சூர் அலிகான் மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு
6 லட்சம் கோவிஷீல்டு தடுப்பு மருந்துகள் இன்று சென்னை வருகை!
ஜடேஜா -மொயின் அலி அசத்தல் பந்துவீச்சு! ராஜஸ்தானை 45 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது சென்னை!
மேக்ஸ்வெல் வரவு - தொடர் வெற்றி : பெங்களூர் அணியின் ‘ஈ சாலா கப் நம்தே’ கனவு பலிக்குமா?
கொரோனா 2-ம் அலையின் மோசமான பாதிப்பை இந்தியா தடுக்கத் தவறியது எப்படி? - ஒரு பார்வை
தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு பலன் தருமா? - ஒரு பார்வை
'தயவுசெய்து, முகக்கவசம் அணிவீர்’- உலுக்கும் தகவலுடன் இன்ஸ்டா பதிவில் மருத்துவர் வேண்டுகோள்