முதல் ஓவரில் ரன் மழை.. அடுத்த ஓவரில் அவுட்.. டெல்லிக்கு பயம் காட்டிய கெயில்!

CHRIS-GAYLE-Rained-boundaries-in-the-first-over-and-Out-in-the-next-over-KXIP-VS-DC-IPL-2020--

துபாயில் நடைபெற்று வரும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் 165 ரன்களை சேஸ் செய்து வருகிறது பஞ்சாப் அணி. 


Advertisement

image

இந்த சீஸனின் சூப்பரான ஓப்பனிங் இணையரான மயங் அகர்வாலும், கே.எல்.ராகுலும் வந்த வேகத்திலேயே பெவிலியன் திரும்பினர். ராகுல் அவுட்டானதும் அதிரடி ஆட்டக்காரர் கிறிஸ் கெயில் கிரீஸுக்கு வந்தார். 


Advertisement

தேஷ்பாண்டே வீசிய ஐந்தாவது ஓவரில் மூன்று பவுண்டரி மற்றும் இரண்டு சிக்சரும் அடித்து மிரட்டியிருந்தார். அதற்கடுத்த ஓவரிலேயே ரவிசந்திர அஷ்வின் வீசிய ஆறாவது ஓவரின் இரண்டாவது பந்திலேயே க்ளீன் போல்டாகி கெயில் வெளியேறினார். 13 பந்துகளில் 29 ரன்களை கெயில் குவித்திருந்தார்.

image

அதே ஓவரில், அஷ்வினின் அபாரமான த்ரோவினாலும், பூரானின் அவசரத்தாலும் மயங் அகர்வால் அவுட்டாகி வெளியேறினார். இதனால், பஞ்சாப் அணிக்கு சற்றே பின்னடைவு ஏற்பட்டது. இதனையடுத்து அதிரடியாக விளையாடி பவுண்டரி, சிக்ஸர்களை விளையாசிய பூரான் அரைசதம் அடித்து ஆட்டமிழந்தார். 


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement