’’முத்தம் கொடு’’ மைனர் பெண்ணிடம் அத்துமீறிய இந்தியருக்கு சிங்கப்பூரில் நிகழ்ந்த பரிதாபம்!

Indian-man-prisoned-for-7-months-after-misbehaved-with-minor-girl-in-Singapore

செல்லம் ராஜேஷ் கண்ணன் என்ற 26 வயது இந்தியர் கடந்த 3 ஆண்டுகளாக சிங்கப்பூரில் பணிபுரிந்து வருகிறார். காதல் திருமணம் செய்துகொண்ட இவருக்கு இரண்டு வயதில் ஒரு பெண்குழந்தை இருக்கிறது. மனைவியும், குழந்தையும் இந்தியாவில் வசித்துவருகின்றனர்.


Advertisement

அவர் கடந்த ஆண்டு இன்ஸ்டாகிராமில் 15 வயது பெண் ஒருவரிடம் பேசியிருக்கிறார். இருவருக்கும் இடையே பழக்கம் அதிகமானதால் நேரில் சந்திக்க சம்மதித்திருக்கிறார் அந்த பெண். அதன்படி கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதலில் சந்தித்தபோது ஒரு பாக்கெட் சிகரெட்டை பரிசாக கொடுத்திருக்கிறார். இரண்டாவதுமுறை இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சந்தித்தபோது தனது நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ள சீடர் வேண்டும் என அந்தப் பெண் கேட்டிருக்கிறார். அதன்படி மூன்று நாட்களுக்குப் பிறகு செப்டம்பர் 8ஆம் தேதி, அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு மாடிப்படியில் வைத்து அந்தப் பெண்ணை முத்தம் கொடுக்கும்படி வற்புறுத்தி இருக்கிறார். மேலும் தன்னுடன் பாலியல் உறவு வைத்துக்கொள்ளுமாறும் வற்புறுத்தியதாக கூறப்படுகிறது.

image


Advertisement

இதனால் அந்த நபர்மீது சிங்கப்பூர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. விசாரணையில் குற்றத்தை ஒத்துக்கொண்ட செல்லம், தான் இவ்வாறு நடந்துகொண்டதற்காக வெட்கப்படுவதற்காகவும், சிங்கப்பூரில் வேலைக்குச் சேர்ந்த 3 ஆண்டுகளில் தான் எந்தக் குற்றத்திலும் ஈடுபடவில்லை எனவும் கூறியிருக்கிறார். மேலும் இதனால் தனது வேலையை இழந்துவிட்டதாகவும், தனது குடும்பத்தையும் இழந்துவிட்டதாகவும் கூறியிருக்கிறார்.

’’எல்லாரும் இறந்துகொண்டு இருக்கிறார்கள்’’ - மாஸ்க் அணியாமல் விமானத்தில் சத்தம்போட்ட பெண் 

அந்தப் பெண்ணிடம் தவறாக நடந்துகொண்டதற்காகவும், பாலியல் தொல்லை கொடுத்ததற்காகவும் இரண்டு பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு 10000 அமெரிக்க டாலர் அபராதமாக விதிக்கப்படலாம் அல்லது 5 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதிக்கப்படலாம் என்றும் வழக்கை விசாரித்த மாவட்ட நீதிபதி ஷான் ஹோ கூறியிருக்கிறார்.


Advertisement

 

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement