’’எல்லாரும் இறந்துகொண்டு இருக்கிறார்கள்’’ - மாஸ்க் அணியாமல் விமானத்தில் சத்தம்போட்ட பெண்

Woman-refused-to-wear-mask-in-flight-and-shouts-everybody-dies-got-arrested

லண்டனில் விமானத்தில் மாஸ்க் அணிய மறுத்ததுடன், விதிமுறைகளை பின்பற்றாததால் வெளியேறச் சொன்ன விமான ஊழியர்கள் மற்றும் பயணிகளிடம் மிகவும் மோசமாக நடந்துகொண்ட பெண்ணின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.


Advertisement

லண்டனில் பெல்ஃபாஸ்ட் விமான நிலையத்தில் ஈஸிஜெட் விமானத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்த சம்பவம் நிகழ்ந்தது. புறப்பட தயாராக இருந்த விமானத்தில் ஒரு பெண் பயணி மாஸ்க் அணியாமல் வேண்டுமென்றே மற்ற பயணிகள்மீது இருமி, தகாத வார்த்தைகளால் திட்டியபடியே வெளியேறும் ஒரு வீடியோ க்ளிப்பை மற்றொரு பயணி வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில் விமான ஊழியர் ஒருவரிடம், ‘’எல்லாரும் இறந்துகொண்டிருக்கிறார்கள், அது உங்களுக்கும் தெரியுமல்லவா?’’ என்று கத்திக்கொண்டே வெளியேறுகிறார். மேலும், ‘’கொரோனா இல்லாவிட்டாலும், அனைவரும் இறக்கப்போகிறார்கள்’’ என்றும் கூறியபடியே செல்கிறார்.


Advertisement

இதுகுறித்து ஈஸிஜெட் நிறுவனத்தின்செய்தி தொடர்பாளர் பிபிசிக்கு கொடுத்த தகவலில், விமானத்தில் ஊழியர்கள் மற்றும் பயணிகளிடம் அந்தப் பெண் தவறாக நடந்துகொண்டதாகவும், இதுகுறித்து போலீஸாருக்கு தகவல் கொடுத்ததாகவும் தெரிவித்திருக்கிறார்.

அந்த பெண்ணின் தவறான நடக்கைக் குறித்து சமூக ஊடகங்களில் பலரும் மற்ற பயணிகளின் உயிருக்கு ஆபத்து விளைவிப்பதாக தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் அந்தப் பெண் கைது செய்யப்பட்டுள்ளதாக விமான நிலையம் தகவல் தெரிவித்துள்ளது.


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement