2,000 ஆண்டுகளுக்கு முன்னர் செதுக்கப்பட்ட பூனை உருவ மலைப்பாதை தெற்கு பெருவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பெருவில் பூனை வடிவத்திலான பிரமாண்ட மலைப்பாதையை தொல் பொருள் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். தலைநகர் லிமாவுக்கு அருகே உள்ள இந்த மலையில் சுமார் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இந்த பிரமாண்ட பூனை வடிவம் செதுக்கப்பட்டிருக்கலாம் என தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். 37 மீட்டர் நீளமுள்ள இந்த மலைப்பாதையானது இயற்கை சீற்றத்தின் காராணமாக நாளடைவில் மறைந்ததாக சொல்லப்படுகிறது. தற்போது ஆராய்ச்சிக்காக சுத்தம் செய்யும்போது பிரமாண்ட மலைப்பாதையை கண்டுபிடிக்கப்பட்டதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
ஹிஸ்பானிக் காலத்திற்கு முந்தைய சமூகங்களைச் சேர்ந்தவர்களால் நாஸ்கா கோடுகள் உருவாக்கப்பட்டன, அவர்கள் பாறை மற்றும் சரளைகளின் மேல் வரிவடிவங்களை வரைந்தனர். சுழல் மற்றும் முக்கோணங்கள் உட்பட பல மர்மமான வடிவியல் வடிவங்களும் பாலைவன நிலப்பரப்பில் செதுக்கப்பட்டன.
கடந்த நூற்றாண்டில் இப்பகுதியில் காணப்பட்ட ஹம்மிங் பறவை, குரங்கு மற்றும் பெலிகன் போன்ற ஜூமார்பிக் வரைபடங்களின் வரிசையில் பூனைவழித்தடம் இணைகிறது.1920 களில் பெருவியன் தொல்பொருள் ஆராய்ச்சியாளர் டோரிபியோ மெஜியா ஜெஸ்பே முதன்முதலில் நிலப்பரப்பில் செதுக்கப்பட்ட மர்மமான கோடுகளைக் கண்டுபிடித்தார். 1930 களில் விமானத்திலிருந்து பார்வையிட்டு மேலும் பல கலைப்படைப்புகள் கண்டுபிடிக்கப்பட்டன, மேலும் ஆராய்ச்சியாளர்கள் தொடர்ந்து பல வரிகளைக் கண்டுபிடித்து அவை எவ்வாறு, ஏன் உருவாக்கப்பட்டன என்பது குறித்த கோட்பாடுகளை உருவாக்கி வருகின்றனர். 2019 ஆம் ஆண்டில் ஜப்பானின் யமகதா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் 3 டி இமேஜிங் உதவியுடன் இப்பகுதியில் 140 க்கும் மேற்பட்ட வரிவடிவக்கோடுகளை கண்டுபிடித்தனர்.
Loading More post
டெல்லி போராட்டத்தில் விவசாயி ஒருவர் உயிரிழப்பு
டெல்லி செங்கோட்டையை முற்றுகையிட்ட விவசாயிகள் புகைப்படத் தொகுப்பு
பதற்றத்தில் டெல்லி: செங்கோட்டையை முற்றுகையிட்ட விவசாயிகள்.. போலீசார் குவிப்பு!
கதிகலங்கும் டெல்லி: வன்முறைக்குள் ஒரு மனிதாபிமானம்: வைரல் வீடியோ!
"சட்ட விதிகளை அற்பமாக்கியுள்ளது!" - POCSO குறித்த மும்பை ஐகோர்ட் தீர்ப்புக்கு எதிர்ப்பு
PT Exclusive: "ரிமோட் மூலம் இயங்கும் அரசை தமிழகம் விரும்பாது!" - ராகுல் காந்தி நேர்காணல்
PT Exclusive: "தமிழகத்திடம் ஏராளமானவற்றை கற்றுக்கொள்ள முடியும்!"- ராகுல் காந்தி நேர்காணல்
'11.2 லட்சம் விவசாயிகளுக்கு PM-KISAN லாக்டவுன் நிதி செல்லவேயில்லை!'- ஆர்டிஐ சொல்வது என்ன?
இது சாதாரண ஆப் அல்ல, சூப்பர் செயலி! - 'பீப்பர்' மெசேஜிங் பாலத்தின் வியத்தகு பின்னணி