வளிமண்டல சுழற்சி... தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை.!

good-rain-in-Tamil-Nadu

மதுரை, விருதுநகர், சிவகங்கை, வேலூர் மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்தது.


Advertisement

 

image


Advertisement


மதுரை மாவட்டம் மேலூர், கீழவளவு, கொட்டாம்பட்டி, கருங்காலக்குடி, திருவாதவூர், கிடாரிப்பட்டி உள்ளிட்ட இடங்களில் ஒருமணி நேரத்திற்கும் மேலாக மழை கொட்டித்தீர்த்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்தது.

அதேபோல விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பகுதிகளில் கனமழை பெய்தது. அதன் சுற்றுவட்டார இடங்களான, சேத்தூர், சத்திரப்பட்டி, முகவூர், தளவாய்புரம், அழகாபுரி உள்ளிட்ட இடங்களில் ஒருமணி நேரத்திற்கும் மேலாக கனமழை பொழிந்தது.

 


Advertisement

image


சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் 3ஆவது நாளாக கனமழை பெய்தது. மானாமதுரை, திருப்புவனம் உள்ளிட்ட இடங்களில் இரவு நேரத்தில் மழை கொட்டித்தீர்த்தது. மழை காரணமாக சிவகங்கை சாலையில், மரம் ஒன்று வேரோடு சாய்ந்தது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் இருள் சூழ்ந்தது.

 

image


வேலூர் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. காட்பாடி, அணைக்கட்டு, குடியாத்தம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் விட்டுவிட்டு மழை பெய்தது. இதே போன்று, காரைக்கால், திண்டிவனம், மரக்காணம் ஆகிய இடங்களிலும் பலத்த மழை பெய்தது.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement