ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் டெல்லி மற்றும் பஞ்சாப் அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன. இனி களமிறங்கும் அனைத்து போட்டிகளையும் வாழ்வா சாவா கட்டத்தில் எதிர்கொள்ளவுள்ள பஞ்சாப் மற்றும் முதலிடத்தை தக்க வைக்க முனைப்பு காட்டும் டெல்லி அணிகளின் பலம் மற்றும் பலவீனம் குறித்து பார்க்கலாம்.
அருமையான பேட்டிங் மேல்வரிசை, அதிவேகப் பந்துவீச்சாளர்கள் என நடப்பு சீசனின் ஆதிக்கம் மிகுந்த அணியாக வலம் வருகிறது டெல்லி அணி. பிரித்வி ஷா ஃபார்மை இழந்துள்ள போதிலும், தவன் முத்திரைப் பதிக்கும் ஆட்டங்களை வெளிப்படுத்தி வருவது அணிக்கு பெரும் பலம். ரிஷப் பந்த்தின் காயம் காரணமாக கடந்த சில போட்டிகளில் விளையாடாமல் உள்ளது அணிக்கு சிக்கல். மத்திய வரிசையில் ஸ்டாய்னிஸ், அக்ஸர் படேல் ஆகியோர் ஆறுதல் அளிக்கின்றனர்.
அலெக்ஸ் கேரி அதிரடி காட்ட திணறுவது பெரும் பின்னடைவு. ஐபிஎல் வரலாற்றிலேயே அதிவேகப்பந்துகளை வீசி எதிரணி பேட்ஸ்மேன்களை திணறடித்து வருகிறார் நாட்ஜ். அவரது பவுலிங் ஜோடியான ரபாடாவின் யார்க்கர்கள் எதிரணியினருக்கு கூடுதல் நெருக்கடி. ஐந்தாவது பந்து வீச்சாளராக வலம் வரும் தேஷ் பாண்டேவும் ஆறுதலான பங்களிப்பை வழங்கத் தொடங்கியிருக்கிறார். அஸ்வினின் சுழல் அனுபவம் அணிக்கு கூடுதல் பலம்.
மும்பைக்கு எதிரான போட்டியில் பெற்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க வெற்றியின் மூலம் புத்துணர்ச்சி பெற்றுள்ளது பஞ்சாப் அணி. பேட்டிங்கில் கேப்டன் ராகுல் முன்னின்று வழிநடத்துவதும் அணிக்கு பெரும்பலம். யுனிவர்ஸ் பாஸ் கிறிஸ் கெய்ல் அணிக்கு திரும்பியுள்ள கூடுதல் பலம். மயங்க் அகர்வால், பூரன் ஆகியோரின் பங்களிப்பு அணிக்கு அசுரபலம்.
ஆல்ரவுண்டர் மேக்ஸ்வெல் ரன்களைக் குவிக்க தவறி வருவது பெரும் பின்னடைவாக உள்ளது. வேகப்பந்துவீச்சைப் பொறுத்தவரையில் ஷமி, கிறிஸ் ஜோர்டன் மற்றும் இளம் வீரர் அர்ஷ்தீப் சிங் ஆகியோர் நல்ல பங்களிப்பை நல்கி வருகின்றனர். பிஷ்னாய் மற்றும் முருகன் அஸ்வினின் சுழற்பந்துகள் பக்கபலமாக இருந்து வருகின்றன.
முழு பலத்தையும் வெளிக்கொணர்ந்துள்ள பஞ்சாப் அணி, ஆதிக்கம் மிகுந்த டெல்லியை வீழ்த்தி பிளே ஆஃப் வாய்ப்புகளை மேலும் பிரகாசமாக்கிக் கொள்ளுமா என்பதே இன்றைய போட்டியின் மீதான உச்சகட்ட எதிர்பார்ப்பு.
Loading More post
'நல்ல நாள்', 'சமூக நீதி' - முதற்கட்ட வேட்பாளர் பட்டியல்... அதிமுக 'முந்தியது' ஏன்?
திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு!
கூட்டணிக் கட்சிகள் கேட்கும் இடங்களை எல்லாம் கொடுத்துவிட முடியாது -ஆர்.எஸ்.பாரதி
ஒதுங்கிய சசிகலா... தேர்தலில் எடுபடுமா தினகரன் வசமுள்ள 3 வியூகங்கள்?!
வாஷிங்டன் சுந்தர் அரை சதம் - 2ம் நாள் முடிவில் இந்திய அணி 294 ரன்கள் குவிப்பு
'நல்ல நாள்', 'சமூக நீதி' - முதற்கட்ட வேட்பாளர் பட்டியல்... அதிமுக 'முந்தியது' ஏன்?
கேரளாவில் கட்சி மாறும் நிர்வாகிகள்... சமூக நீதியை உறுதிப்படுத்த தவறியதா காங்கிரஸ்?!
ஒதுங்கிய சசிகலா... தேர்தலில் எடுபடுமா தினகரன் வசமுள்ள 3 வியூகங்கள்?!
அப்பாஸ் சித்திக்: மேற்கு வங்க அரசியலின் புது வரவு... யாருக்கு லாபம்?