கொரோனா சிகிச்சைக்கான புதிய முயற்சி... 25ஆயிரம் டாலர் பரிசுவென்ற அமெரிக்கவாழ் இந்திய சிறுமி

Indian-American-Teen-Anika-Chebrolu-Wins--25-000-Prize-For-Potential-Covid-Treatment

சார்ஸ்-கோவிட்-2 வைரஸில் ஒரு குறிப்பிட்ட புரதத்துடன் பிணைக்கக்கூடிய மூலக்கூற்றை உருவாக்கியுள்ள, 14 வயதே ஆன அமெரிக்கவாழ் இளம் இந்திய மாணவியான அனிகா செப்ரோலு 25 ஆயிரம் டாலர் பரிசினை வென்றுள்ளார்.


Advertisement

image

கொரோனா வைரஸ் சிகிச்சைக்கான கண்டுபிடிப்பிற்காக, 14 வயதே ஆன அமெரிக்கவாழ் இந்திய இளம் மாணவியான அனிகா செப்ரோலுவின் ஆராய்ச்சிக்காக 25,000 டாலர் பரிசு வழங்கப்பட்டுள்ளது. கோவிட் -19 க்கு சிகிச்சையளிப்பதற்கான ஒரு சாத்தியமான மருந்து கண்டறியும் தனது ஆராய்ச்சிக்காக ”2020 3 எம் இளம்விஞ்ஞானி” போட்டியில் இவர் இப்பரிசை வென்றுள்ளார். "SARS-CoV-2 வைரஸில் ஒரு குறிப்பிட்ட புரதத்துடன் பிணைக்கக்கூடிய மூலக்கூறை நான் உருவாக்கியுள்ளேன். இந்த மூலக்கூற்றை பிணைப்பதன் மூலம் அது அந்த புரதத்தின் செயல்பாட்டை நிறுத்திவிடும்” என்று எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவி அனிகா செப்ரோலு கூறியுள்ளார்.


Advertisement

அனிகா இந்த ஆண்டு தொடங்கத்திலிருந்து பருவகால காய்ச்சல்களை கட்டுப்படுத்தும் சிகிச்சைகளை கண்டறியும் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தார். அதன்பின்னர் கொரோனா தொற்றுநோய் தாக்கத்திற்குபின் அவளுடைய திட்டங்கள் மாறின. அனிகா பிறகு கொரோனா வைரஸிற்கு சாத்தியமான மருந்தைக் கண்டுபிடிப்பதற்காக பல கணினி நிரல்களைப் ஆய்வு செய்தார். COVID-19 தொற்றுநோய்க்கு ஒரு தீர்வைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் SARS-CoV-2 வைரஸின் ஸ்பைக் புரதத்துடன் ஒரு மூலக்கூறை இணைத்து மருந்து கண்டுபிடிக்க அனிகா இன்-சிலிகோ முறையைப் பயன்படுத்தினார். அவரது ஆராய்ச்சி ஒரு நேரடி மாதிரியில் சோதிக்கப்பட்டதா என்பது பற்றிய தகவல்கள் இல்லை.

 

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement