தீபாவளி சீசனில் சீன ஏற்றுமதி நிறுவனங்கள் ரூ.40000 கோடி இழப்பை சந்திக்க வாய்ப்பு..!

Chinese-exporters-may-incur-Rs-40k-crore-loss-this-Diwali-season-amid-boycott-call-by-local-sellers

இந்தியாவில் சீனத் தயாரிப்புகளின் புறக்கணிப்பால் சீன நிறுவனங்கள் ரூ.40000 கோடி இழப்பை சந்திக்கக்கூடும் என மதிப்பிடப்பட்டுள்ளது.


Advertisement

இந்திய- சீனா எல்லையில் கல்வான் பகுதியில் ஏற்பட்ட மோதலில் இந்திய 20 வீரர்கள் கொல்லப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக 500 வகையான சீனப் பொருட்களை பட்டியலிட்டு அவற்றை புறக்கணிக்கப் போவதாக அகில இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பு கடந்த ஜூன் மாதம் அறிவித்தது.

இந்நிலையில் இந்த புறக்கணிப்பால் சீன ஏற்றுமதி நிறுவனங்கள் இந்த தீபாவளி நேரத்தில் ரூ .40,000 கோடி வணிக இழப்பை சந்திக்கக்கூடும் என்று அகில இந்திய வர்த்தகர்களின் கூட்டமைப்பு (சிஐஐடி) தெரிவித்துள்ளது.


Advertisement

imageசிஐஐடி வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘’தீபாவளி நேரத்தில் இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 70,000 கோடி ரூபாய் அளவிலான வர்த்தகம் நடைபெறும். இதில் ரூ.40,000 கோடி மதிப்பிலான பொருட்கள் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது.

இந்திய- சீனா எல்லையில் கல்வான் பகுதியில் ஏற்பட்ட மோதலில் இந்திய தரப்பில் 20 வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்நிகழ்வால் இந்திய மக்கள் சீனா மீது பெரும் கோபமும் மனக்கசப்பும் நிலவுகிறது. இது சீன தயாரிப்புகளை புறக்கணிக்க மக்களைத் தூண்டியுள்ளது.

வர்த்தகர்கள் தங்களை போதுமான அளவு பொருட்களை உற்பத்தி செய்து வைத்துள்ளனர். குறிப்பாக மொபைல், எலக்ட்ரானிக்ஸ், மின் பொருட்கள், பொம்மைகள், வீட்டு அலங்காரங்கள், சமையலறை பாகங்கள், பரிசு பொருட்கள், கைக்கடிகாரங்கள், ஆயத்த ஆடைகள், காலணி, அழகுசாதன பொருட்கள், அழகு பொருட்கள்,  எஃப்எம்சிஜி தயாரிப்புகள், நுகர்வோர் பொருட்கள், எழுதுபொருள், தீபாவளி பூஜை மற்றும் வீட்டிற்கான அலங்கார பொருட்கள் போன்றவை பெரிய அளவில் விற்க வாய்ப்புள்ளது.


Advertisement

தீபாவளி தொடர்பான பொருட்களைத் தயாரிக்க உள்ளூர் உற்பத்தியாளர்களை ஊக்குவித்து வருகிறோம். ஆன்லைனில் நடைபெறும் பண்டிகைக் கால சிறப்பு விற்பனை சென்ற ஆண்டு அக்டோபரை விட இந்த அக்டோபரில் 70% விற்பனை அதிகரிக்கும்’’ என்று தெரிவித்துள்ளது.

 

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement