தமிழகத்தில் ஒரு மழைக்காலம்: சில மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

Widespread-rain-in-many-parts-of-Tamil-Nadu-Chance-of-heavy-rain-in-some-districts

சென்னையில் பல்வேறு இடங்களில் அதிகாலை முதல் மிதமான ‌மழை ‌பெய்து வருகிறது. மீனம்பாக்கம், ஈக்காட்டுத் தாங்கல், தியாகராயநகர், அண்ணாநகர், போரூர், அம்பத்தூர், வண்டலூர் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.


Advertisement

‌ம‌யிலாடுதுறை மாவட்டம் சீர்காழி, கொள்ளிடம், பூம்புகார், தரங்கம்பாடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் சாரல் மழை பெய்தது. விழுப்புரம் மாவட்டத்தில் திருவெண்ணெய் நல்லூர் அருகே எடைய‌ர் புதுப்பாளையம்‌, பள்ளிப்பாளையம் ஆகிய பகுதிகளில் கன‌மழை பெய்து வருகிறது.

சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளம்: வாகன ஓட்டிகள் அச்சம்


Advertisement

image

மேலும், கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பரவலாக மழை பெய்துவருகிறது. வெப்பச்சலனம் காரணமாக இன்று ராணிப்பேட்டை, வேலூர் உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

சென்னை, காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய‌ வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்ட்டுள்ளது.


Advertisement

புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் உருவில் அவதரித்த துர்கை  

 

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement