காட்டுத்தீ அணைக்கும் பணி: வீரர்களின் ஹெலிகாப்டரில் தஞ்சமடைந்த ஆந்தை

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

கலிபோர்னியாவில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயை ஆகாய மார்க்கமாக ஹெலிகாப்டர் மூலம் பறந்தபடி தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர் தீயணைப்பு படை வீரர்கள். 


Advertisement

இந்நிலையில் அவர்கள் பயணித்த ஹெலிகாப்டரில் அழையா விருந்தாளியாக வாலண்டரியாக வந்து சில நிமிடம் பயணித்துள்ளது ஆந்தை ஒன்று.

https://www.facebook.com/sky.aviation.wy/posts/3719180664788418


Advertisement

அதை எதேச்சசையாக தனது கேமிராவில் படம் பிடித்துள்ளார் ஹெலிகாப்டரை இயக்கிய விமானி டேன் அல்பைனர்.

அதனை SKY AVIATION நிறுவனம் சமூக வலைத்தளங்களில் பகிர அந்த படம் தற்போது வைரலாகி வருகிறது. 

“ஆகாயத்தில் பறந்து கொண்டிருக்கும் ஹெலிகாப்டரில் ஆந்தை தஞ்சம் புகுவது அரிதான நிகழ்வு.  சில நிமிடங்கள் இளைப்பாறி விட்டு அது மீண்டும் ஹெலிகாப்டரிலிருந்து பிரியா விடை பெற்று சென்றது” என அந்த படத்திற்கு SKY AVIATION கேப்ஷனும் கொடுத்துள்ளது. 


Advertisement

கலிபோர்னியாவில் உள்ள Sierra தேசிய வனத்தில் ஏற்பட்ட காட்டுத்தீயிலிருந்து தப்பிக்கவே அந்த ஆந்தை ஹெலிகாப்டரில் தஞ்சம் அடைந்ததாகவும் சொல்லப்படுகிறது. 

 

loading...

Advertisement

Advertisement

Advertisement