நண்பனின் மனைவியை கொல்ல ரூ.5,000... 20ஆண்டுகளுக்கு பின் கைதான குற்றவாளி.!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

மனைவியை கொல்ல நண்பருடன் ரூ.5,000 கொலை ஒப்பந்தம்.. 20 ஆண்டுகளுக்குப் பின் கைது.   


Advertisement

குஜராத்தின் விஜாபூர்மேக் கிராமத்தில் சுரேஷ் நவி மற்றும் குந்தா என்ற தம்பதியினர் வசித்து வந்தனர். 20 ஆண்டுகளுக்கு முன்பு இந்த தம்பதியினரிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனைவி குந்தாவை கொலை செய்ய முடிவெடுத்த சுரேஷ் நவி, தனது நண்பரான ஷம்பு ராவலை அணுகியுள்ளார். ராவலுக்கு ரூ. 5,000 கொடுத்து தனது மனைவியை கொன்று விடுமாறு திட்டம்போட்டு கொடுத்துள்ளார் சுரேஷ் நவி.

இதையடுத்து பிப்ரவரி 18, 2000 அன்று குந்தாவை அவரது வீட்டில் கழுத்தை நெரித்து ஷம்பு ராவல் கொலை செய்தார். இச்சம்பவத்திற்கு பின்னர் ராவல் மற்றும் சுரேஷ் நவி இருவரும் தலைமறைவாகி விட்டனர். எனினும் கொலையான பெண்ணின் கணவர் சுரேஷ் நவி போலீசில் பிடிபட்டார்.


Advertisement

ஆனால் ஷம்பு ராவல் பிடிபடாமல் 20 ஆண்டுகளாக தலைமறைவாகவே வாழ்ந்து வந்துள்ளார். இதற்கிடையில் சுரேஷ் நவி சிறைச்சாலையில் நோயின் காரணமாக இறந்துபோனார்.

இந்நிலையில் 20 ஆண்டுகளுக்கு பின்னர் ஷம்பு ராவல் போலீசிடம் சிக்கியுள்ளார். அவரை கைது செய்த போலீசார் ராவல் மீது கொலை வழக்குப்பதிவு செய்து, இந்த இடைப்பட்ட ஆண்டுகளில் வேறு ஏதேனும் குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டுள்ளாரா என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.

 


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement