5 ஆண்டுகளுக்கு பின் தனுஷ் - அனிருத் மீண்டும் கூட்டணி!

Dhanush-and-Anirudh-reunite-after-5-years

5 ஆண்டுகளுக்குப் பின் தனுஷ் அனிருத் மீண்டும் புதிய படத்திற்காக இணைந்தனர்.


Advertisement

தமிழ் திரையுலகில் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்திருந்த நடிகர் தனுஷ் மற்றும் இசையமைப்பாளர் அனிருத் ஆகியோர் மீண்டும் இணைந்துள்ளனர். ஐஸ்வர்யா தனுஷ் இயக்கிய '3' படத்தின் மூலம் அனிருத் இசையமைப்பாளராக அறிமுகமானார். அந்தப் படத்தில் இடம்பெற்ற 'Why this கொலவெறி' பாடலை தனுஷ் எழுதினார்.

 


Advertisement

image

இந்தப் பாடல் வெற்றியடைந்த நிலையில், வேலையில்லா பட்டதாரி, மாரி, எதிர் நீச்சல் உள்ளிட்ட படங்களில் தனுஷூம் அனிருத்தும் இணைந்து பணிபுரிந்தனர். ஆனால் 2015-ம் ஆண்டு வெளியான 'தங்க மகன்' படத்திற்கு பிறகு அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டது என திரையுலகில் பேசப்பட்டது. இந்த நிலையில் ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு இருவரும் மீண்டும் இணைந்துள்ளனர். யாரடி நீ மோகினி, குட்டி உள்ளிட்ட படங்களை இயக்கிய மித்ரன் ஆர் ஜவஹர் இயக்கும் புதிய படத்தில் தனுஷ் - அனிருத் கூட்டணி இணைகிறது என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement