கமல்ஹாசன் தனித்து நிற்பது அதிமுக, பாஜகவுக்குதான் சாதகமாக அமையும் – கே.எஸ் அழகிரி பேட்டி

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

மக்கள் நீதி மய்யம் கட்சியின் முதல்வர் வேட்பாளராக கமல்ஹாசனை தேர்வு செய்து, அக்கட்சியின் செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. முதல்வர் வேட்பாளராக தனித்து களம் காணும்போது திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணிக் கட்சிகளின் வாக்குகளைப் கமல்ஹாசன் பிரிப்பாரா? என்பது குறித்து காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரியிடம் பேசினோம்,  


Advertisement

   “கமல்ஹாசன் மதசார்பற்றக் கருத்துகளைச் சொல்கிறார். இடதுசாரியக் கருத்துகளைச் பேசுகிறார். ஆனால், அவரது அரசியல் பயணம் மதசார்பற்ற அணிக்கு உதவக்கூடியதாக இல்லை. மதசார்பற்ற கருத்துகளைக் கொண்ட பெரிய அணி இந்தியா முழுவதும் அமைக்கப்பட்டிருக்கிறது. தமிழகத்திலும் அந்த அணி அமைக்கப்பட்டு நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றியும் பெற்றிருக்கிறது.

image


Advertisement

மதவாதம் அதிகரித்துள்ள, இந்த நேரத்தில் மதசார்பற்ற அணிக்கு பலம் சேர்க்காமல் கமல்ஹாசன் தனித்து நிற்பது அந்தக் கொள்கையை சிதைத்து விடும். அது மறைமுகமாக பாஜகவுக்கோ அதிமுகவிற்கோ பயனளிக்கக்கூடும். அவர் அந்த நோக்கத்தில் செய்யவில்லை என்பது எனக்கு நன்கு தெரியும். ஆனால், அவரது தனித்தன்மை என்பது அந்த திசையை நோக்கித்தான் கொண்டு சென்று விடும் என்பதை அரசியல் அனுபவத்தில் சொlல்கிறேன். எனவே,கமல்ஹாசன் தனித்து நிற்க வேண்டாம். மதசார்பற்று இருப்பதால் எங்களோடு இணைந்து தேர்தலை சந்திக்கலாம்” என்கிறார்.

- வினி சர்பனா

 


Advertisement

 

 

loading...

Advertisement

Advertisement

Advertisement