மீண்டும் கேதர் ஜாதவ் .. அதிர்ச்சி கொடுத்த தோனி : டாஸ் வென்ற சென்னை பேட்டிங் தேர்வு 

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

ஷார்ஜாவில் நடைபெறும் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் தோனி பேட்டிங் தேர்வு. 


Advertisement

இதனால் பவுலிங் செய்கிறது டெல்லி அணி. 

இந்த சீசனில் ஆரம்பம் முதலே புள்ளிப் பட்டியலில் ஆதிக்கம் செலுத்தி வரும் டெல்லியை இன்றைய ஆட்டத்தில் சென்னை வென்றாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. கடந்த செப்டம்பர் 25ஆம் தேதியன்று டெல்லியும், சென்னையும் முதல் லீக் ஆட்டத்தில் மோதின. அதில் டெல்லி அணி 44 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. 


Advertisement

அதற்கு பதிலடி கொடுக்கும் முனைப்போடு சென்னை களம் இறங்கியுள்ளது. சென்னை அணியில் பியுஷ் சாவ்லாவுக்கு பதில் கேதர் ஜாதவ் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளார். மிகவும் மோசமான ஆட்டத்தை தொடர்ச்சியாக வெளிப்படுத்தி வந்ததால் அணியில் இருந்து நீக்கப்பட்ட அவர் மீண்டும் இன்றைய போட்டியில் இடம்பிடித்துள்ளார். டெல்லி அணியில் எவ்வித மாற்றமும் இல்லை.

loading...

Advertisement

Advertisement

Advertisement