நீட் தேர்வு குறித்து தேசிய தேர்வு முகமை வெளியிட்ட புள்ளிவிவரங்களில் குளறுபடி ஏற்பட்டதையடுத்து அது நீக்கப்பட்டு புதிய புள்ளி விவரங்கள் இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளன.
நீட் தேர்வு முடிவுகளை தேசிய தேர்வு முகமை நேற்று இணையதளத்தில் வெளியிட்டது. அதில், திரிபுராவில் நீட் தேர்வு எழுதியதே 3,536 பேர் என்கிற நிலையில் தகுதி பெற்றவர்கள் 88,889 பேர் என முடிவுகள் வந்திருந்தது குழப்பத்தை ஏற்படுத்தியது. இதேபோல் தெலங்கானாவில் 50,392 பேர் தேர்வு எழுதினர். இவர்களில் 1,738 பேர் மட்டுமே தேர்ச்சி என இருந்தது. ஆனால் அங்கு தேர்வு தேர்ச்சி பெற்றவர்கள் விகிதம் 49.15 சதவீதம் என தவறாக குறிப்பிடப்பட்டிருந்தது.
உத்தரபிரதேசத்தில் 1,56,992 பேர் தேர்வு எழுதியதில், 7,323 பேர் மட்டுமே தேர்ச்சி என்றும் தேர்ச்சி விகிதம் 60.79% என்றும் தவறான முடிவுகள் வெளிவந்திருந்தன. உத்தரகாண்ட்டில் 12,047 மட்டுமே தேர்வு எழுதிய நிலையில் 37,301 பேர் தேர்ச்சி பெற்றதாக புள்ளிவிவரங்களில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதுகுறித்து விளக்கமளித்த தேசிய தேர்வு முகமை, அச்சடிக்கப்பட்டதில் தவறு நடந்துவிட்டதாகவும், திருத்தப்பட்ட அறிக்கை பதிவேற்றப்படும் என்றும் தெரிவித்து இணையத்தில் இருந்து நீக்கியது
இந்நிலையில் புதிய புள்ளிவிவர பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. தற்போது திரிபுராவில் தேர்வு எழுதிய 3536 பேரில் 1738 பேர் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கபட்டுள்ளது.
Loading More post
“சசிகலாவுக்கு உடல்நலக்குறைவு என்பது ஐயத்தை ஏற்படுத்துவதாக உள்ளது” - சீமான்
கொரோனா தடுப்பூசி செலுத்திய ஆறு நாட்களுக்கு பிறகு சுகாதார பணியாளர் மரணம்
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: முதல் பரிசு வென்றவர் ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டது உறுதி
“கீழடியில் 7-ஆம் கட்ட அகழாய்வு பிப்ரவரியில் தொடங்கும்” - தமிழக தொல்லியல்துறை
இந்தியாவின் முதல் எலக்ட்ரிக் பிஸினஸ் ஸ்கூட்டர்; அசத்தும் வசதிகள்
அமெரிக்க அதிபர் பைடனின் தொடக்க உரையை செதுக்கிய இந்தியர்... யார் இந்த வினய் ரெட்டி?!
வதந்திகளை நம்பாதீர்.. தடுப்பூசி செலுத்திக் கொண்ட மருத்துவரின் அனுபவப் பகிர்வு
'Is Love Enough? Sir' - காதலில் காசு ஒரு பொருட்டே இல்லைன்னு யார் சார் சொன்னது?!
இந்தியக் குடும்பங்களில் சுரண்டப்படும் பெண்களின் உழைப்பு - ‘தி கிரேட் இண்டியன் கிச்சன்’