திருட்டு குடும்பத்தின் கொட்டத்தை அடக்கிய போலீஸ்.. குறும்படமாக வெளியிட்ட தென்காசி காவல்துறை

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

திருட்டு குடும்பத்தின் கொட்டத்தை அடக்கிய தென்காசி காவல்துறை


Advertisement

தென்காசி மாவட்டத்தில் கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் 2019 ஆண்டு வரை சுமார் 150 இடங்களில் இரவு நேரங்களில் தூங்கிக் கொண்டிருக்கும் பெண்களிடம் செயின் பறிப்பு சம்பவங்கள் நடந்தன. இந்நிலையில் இதில் சம்பந்தப்பட்ட குற்றவாளியை தென்காசி மாவட்ட காவல்துறையினர் கைது செய்து விசாரித்ததில் இச்சம்பவங்களில் ஈடுபட்டது அனைத்தும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது.

மேலும் விசாரணையில் குற்றவாளிகள் கண்காணிப்பு கேமராக்கள் இல்லாத பகுதியில் மட்டுமே பகல் நேரங்களில் நோட்டம் பார்த்து இரவு நேரங்களில் செயின் பறிப்புகளில் ஈடுபட்டுள்ளது தெரிய வந்தது. ஒரு குற்றம் நடைபெறாமல் தடுப்பதற்கான கேமராக்கள் எவ்வளவு முக்கியம் என்பதை கருத்தில் கொண்டு அதை ஒரு குறும்படமாக எடுக்க தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுகுண சிங்கால் திட்டமிடப்பட்டது.


Advertisement

இதனை காவல் துறை சம்பந்தப்பட்ட சேதுபதி திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் அருண்குமார் இக்குறும்படத்தை இயக்கி உதவி செய்ய முன் வந்ததையடுத்து, 'இமைக்கா விழிகள்' என்ற தலைப்புடன் குறும்படம் எடுத்து முடிக்கப்பட்டது. இப்படத்தில் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட நபர்களை குறிப்பாக பெண்களே நடித்துள்ளதால் மிகவும் இயல்பாகவும் தத்ரூபமாகவும் உள்ளது.

இதனை திருநெல்வேலி சரக காவல்துறை துணைத்தலைவர் பிரவின் குமார் அபினபு முன்னிலையில் வெளியிட்டு கண்காணிப்பு கேமராக்களின் அவசியத்தை பத்திரிகையாளர்களுடன் பகிர்ந்து கொண்டார். இமைக்கா விழிகள் திரைப்படம் கண்காணிப்பு கேமராக்களின் முக்கியத்துவத்தை சிறப்பாக எடுத்துரைப்பதாக குறும்படத்தை பார்த்தவர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement