3 வார கைக்குழந்தையுடன் பணிக்கு வந்த பெண் அதிகாரி பணிமாற்றம்.!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

உத்தரபிரதேசத்தின் ஐஏஎஸ் அதிகாரி சவும்யா பாண்டே என்பவர் சமீபத்தில் துணை மாஜிஸ்திரேட்டாக நியமிக்கப்பட்டார். இதற்கிடையே கர்ப்பிணியாக இருந்த சவும்யா பாண்டே பெண் குழந்தைக்கு தாயானார்.


Advertisement

இந்நிலையில் பிரசவகால விடுப்பு எடுக்காத பெண் அதிகாரி சவும்யா பாண்டே தன்னுடைய 3 வாரகால கைக்குழந்தையுடன் பணிக்கு திரும்பினார். தனது கைக்குழந்தையை கையில் வைத்துக்கொண்டு கோப்புகளுக்கு கையெழுத்திடும் வீடியோ இணையத்தில் வைரலாகி பலரின் பாராட்டுகளையும் பெற்றது.

பெண் அதிகாரிக்கு பலரும் பாராட்டுகள் தெரிவித்தனர். அதேவேளையில் சரியான ஓய்வுக்கு பிறகு பெண் அதிகாரி பணிக்கு வர வேண்டும் எனவும் சிலர் அன்பாக குறிப்பிட்டனர். இந்நிலையில் அதிகாரி சவும்யா பாண்டே, காஷிபாத்தில் இருந்து கான்பூருக்கு பணிமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இது குறித்த செய்தியை, livehindustan.com வெளியிட்டுள்ளது. மேலும் இது வழக்கமான பணிமாற்றம்தான் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement