"ஓய்வுபெற்ற டிஜிபி என்பதால் விசாரணை சாதகமாகலாம்”- சிபிஐ விசாரணை கேட்கும் நடிகர் சூரி...!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

நிலம் வாங்கித் தருவதாகக் கூறி 2 கோடியே எழுபது லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக தான் அளித்த புகாரை சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரி நடிகர் சூரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.


Advertisement

நடிகர் விஷ்ணு விஷாலின் தந்தையும், ஓய்வு பெற்ற டிஜிபியுமான ரமேஷ் குடவாலா மற்றும் தயாரிப்பாளர் அன்புவேல் ராஜனும் இணைந்து, நிலம் வாங்கித் தருவதாகக் கூறி 2 கோடியே 70 லட்சம் ரூபாயை பெற்றுக் கொண்டதாகவும், ஆனால், நிலத்திற்கான உரிய ஆவ‌ணங்கள் இல்லாததால் தமது பணத்தை திரும்ப கேட்டபோது, அ‌வர்கள் தராமல் ஏமாற்றியதாகவும் நடிகர் சூரி புகார் தெரிவித்திருந்தார்.

image


Advertisement

இதனையடுத்து ரமேஷ் குடவாலா உள்ளிட்ட இருவர் மீது 5 பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் ‌வழக்குப்பதிவு செய்தனர். தரவேண்டிய பணத்தை கேட்டபோது விஷ்ணுவிஷாலின் தந்தை ரமேஷ் குடவாலாவும், அன்புவேல் ராஜனும் கொலை மிரட்டல் விடுத்ததாகவும் நடிகர் சூரி குற்றஞ்சாட்டியிருந்தார். வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி ரவீந்திரன், நடிகர் சூரியின் புகார் மீது நடத்தப்பட்ட விசாரணை அறிக்கையை நவம்பர் இறுதி வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய காவல்துறையினருக்கு உத்தரவிட்டார்.

image

ரமேஷ் குடவாலா மற்றும் தயாரிப்பாளர் அன்புவேல் ராஜன் ஆகியோருக்கு எதிரான புகாரை சிபிஐ விசாரணைக்கு மாற்றக்கோரி நடிகர் சூரி மனுதாக்கல் செய்துள்ளார். அதில், ரமேஷ் குடவாலா டிஜிபியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர் என்பதால் காவல்துறை விசாரணை அவருக்கு சாதகமாக அமையலாம் எனக் குறிப்பிட்டுள்ளார்.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement