'இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடக் கூடாது' -சீனாவுக்கு எச்சரிக்கை

China-not-to-interfere-in-internal-issues-of-India

எங்கள் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடக்கூடாது என சீனாவுக்கு இந்தியா பதிலடி கொடுத்துள்ளது.


Advertisement

எல்லையில் பதற்றம் நிலவிவரும் சூழலில், இருநாட்டு பேச்சுவார்த்தையில் எட்டப்பட்ட ஒருமித்த முடிவுகளை ஆர்வத்துடன் செயல்படுத்தவும் பதற்றத்தை அதிகரிக்கக்கூடிய செயல்களில் இருந்து விலகி இருக்கவும் இந்தியாவை தாங்கள் கேட்டுக்கொள்வதாக சீனாவின் வெளியுறவு செய்தித் தொடர்பாளர் ஜாவோ விஜியான் கேட்டுக்கொண்டர்.

image


Advertisement

மேலும் லடாக் யூனியன் பிரதேசத்தை இந்தியா சட்டவிரோதமாக அமைத்து இருப்பதாகவும், அதை சீனா அங்கீகரிக்கவில்லை எனவும் அவர் கூறியுள்ளார். அதேபோல, அருணாசலப் பிரதேசத்தையும் சீனா அங்கீகரிக்கவில்லை என அவர் தெரிவித்திருந்தார். இதற்கு, இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில் சீனா‌ தலையிடக்கூடாது என நேற்று இந்தியா பதிலடி கொடுத்துள்ளது.

ஜம்மு காஷ்மீர், லடாக் யூனியன் பிரதேசம் மற்றும் அருணாச்சலப் பிரதேசம் ஆகியவை இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதிகள் என வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவத்சவா தெரிவித்துள்ளார். இந்த உண்மையை உயர்மட்ட ரீதியில் பல்வேறு நி‌கழ்வுகளில் சீனாவுக்கு தெளிவுபடுத்தியிருக்கிறோம் எனவும் அவர் கூறியுள்ளார்.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement