சென்னை: ஸ்கூட்டியில் மோதிய பேருந்து; 2 இளம்பெண்கள் உயிரிழப்பு

2-girls-killed-in-Chennai-city-bus-collision-in-chennai

சென்னை தாம்பரம் அருகே இருச்சக்கர வாகனத்தின் மீது மாநகரப் பேருந்து மோதிய விபத்தில் 2 இளம்பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.


Advertisement

சென்னை தாம்பரம் அடுத்த சேலையூர், வேளச்சேரி பிரதான சாலையில் இரண்டு பெண்கள் இருச்சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது பின்னால் வந்த தடம் எண் 51 மாநகர பேருந்து இருச்சக்கர வாகனத்தில் திடீரென மோதியது. இதில் இருச்சக்கர வாகனத்தில் சென்ற இரண்டு பெண்களும் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதையடுத்து பேருந்தின் ஓட்டுநர் சங்கர் அங்கிருந்து தப்பித்துச் சென்று காவல்நிலையத்தில் சரணடைந்தார்.

image


Advertisement

இதுகுறித்து தகவலறிந்து நிகழ்விடத்திற்கு சென்ற குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் இறந்தவர்களின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முதற்கட்ட விசாரணையில் சாலை விபத்தில் உயிரிழந்தவர்கள் மேரி ரோஸ்லின்(20), கலைவாணி(19) ஆகியோர் என்பது தெரியவந்தது.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement