நடிகர் விஜய்சேதுபதி இலங்கை கிரிக்கெட் வீரர் கதாபாத்திரத்தில் நடிப்பது அவரது உரிமை என்று பாஜக மாநிலத் துணைத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
பழனியில் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக மாநிலத் துணைத் தலைவர் அண்ணாமலை பல்வேறு விவகாரங்கள் குறித்து பேசினார். அதில்
''தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் நாட்கள் உள்ளது. தற்போது கொள்கை ரீதியாக உடன்பாடுள்ள கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன. தேர்தல் நேரத்தில் அப்போதைய சூழ்நிலையை பொறுத்தே கூட்டணியில் கட்சிகள் இணையும். அதுவரை எவ்வித குழப்பமும் இல்லை. தமிழகத்தில் 65 தொகுதிகளில் வெற்றி வாய்ப்பை நிர்ணயிக்கும் சக்தியாக பாஜக உள்ளது என்று பாஜக மாநிலத்தலைவர் முருகன் தெரிவித்தார். ஆனால் 65 தொகுதிகளை பாஜக கேட்பதாக திரித்து பரப்பிவிட்டனர். மாற்றுத்திறனாளிகள் குறித்து குஷ்பு பேசியதற்கு மன்னிப்பு கேட்டுள்ளார். அதனை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
முத்தையா முரளிதரன் தொடர்பான சினிமாவில் விஜய்சேதுபதி நடிப்பதில் எவ்வித தவறும் இல்லை. ஒரு கலைஞனுக்கு சினிமாவில் நடிக்க எல்லா உரிமையும் உள்ளது. விஜய்சேதுபதி நடிப்பது அவரது தனிப்பட்ட உரிமை. அதில் அரசியலை கலப்பது சரியல்ல
கன்னியாகுமரி நாடாளுமன்ற இடைத்தேர்தலில் பாஜக போட்டியிடுமா என்பதை தலைமை முடிவு எடுக்கும். வரும் சட்டமன்ற தேர்தலில் பாஜக தலைமை உத்தரவிட்டால் தேர்தலில் போட்டியிடுவேன்.
தற்போது பாரதிய ஜனதா கட்சியின் நல்லத் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதே எனது வேலை. சிறுபான்மையினர் அதிகளவில் பாஜகவில் சேர்ந்து வருகின்றனர். சிறுபான்மையினர், தாழ்த்தப்பட்ட மக்கள் அனைவருக்கும் உரிய மரியாதையை செய்வதில் பாஜக தவறியது இல்லை என்று தெரிவித்துள்ளார்
Loading More post
குடல் இறக்க அறுவை சிகிச்சை முடிந்து முதல்வர் பழனிசாமி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்!
முக்கியச் செய்திகள்: அச்சுறுத்தும் கொரோனா 2-ம் அலை முதல் சென்னை அணியின் வெற்றி வரை
தடுப்பூசி குறித்த சர்ச்சை கருத்து - மன்சூர் அலிகான் மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு
6 லட்சம் கோவிஷீல்டு தடுப்பு மருந்துகள் இன்று சென்னை வருகை!
ஜடேஜா -மொயின் அலி அசத்தல் பந்துவீச்சு! ராஜஸ்தானை 45 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது சென்னை!
மேக்ஸ்வெல் வரவு - தொடர் வெற்றி : பெங்களூர் அணியின் ‘ஈ சாலா கப் நம்தே’ கனவு பலிக்குமா?
கொரோனா 2-ம் அலையின் மோசமான பாதிப்பை இந்தியா தடுக்கத் தவறியது எப்படி? - ஒரு பார்வை
தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு பலன் தருமா? - ஒரு பார்வை
'தயவுசெய்து, முகக்கவசம் அணிவீர்’- உலுக்கும் தகவலுடன் இன்ஸ்டா பதிவில் மருத்துவர் வேண்டுகோள்