நீட் தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு

NEET-results-to-be-announced-today

மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின்றன.


Advertisement

மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கான நீட் எனப்படும் நுழைவுத் தேர்வு, நாடு முழுவதும் கடந்த மாதம் 13-ஆம் தேதி நடைபெற்றது. 3 ஆயிரத்து 862 மையங்களில் நடந்த இந்த தேர்வுக்கு, 15 லட்சத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பித்திருந்த நிலையில், சுமார் 13 லட்சத்து 52 ஆயிரம் பேர் மட்டுமே தேர்வை எழுதியிருந்தனர்.

image


Advertisement

தமிழகத்தில் ஒரு லட்சத்து 17 ஆயிரம் பேர் நீட் தேர்வை எழுதினர். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த மாணவர்கள் மற்றும் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் இருந்த மாணவர்களுக்கு நேற்றுமுன்தினம் மறுதேர்வு நடத்தப்பட்டது.

இந்த நிலையில் நீட் தேர்வு முடிவுகளை தேசிய தேர்வுகள் முகமை இன்று வெளியிடுகிறது. nta.ac.in மற்றும் ntaneet.nic.in ஆகிய இணையதளங்களில் தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement