ஷார்ஜாவில் நடப்பு ஐபிஎல் சீசனின் 31வது லீக் ஆட்டத்தில் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், கே.எல். ராகுல் தலைமையிலான பஞ்சாப் அணியும் இரண்டாவது முறையாக விளையாட உள்ளது.
இந்த இரு அணிகளும் மோதிய முதல் ஆட்டத்தில் கே.எல்.ராகுலின் கேட்சை இரண்டு முறை தவறவிட்டிருந்தார். அதனால் பஞ்சாப் அணி அந்த ஆட்டத்தில் வெற்றியும் பெற்றது. இந்த சீசனில் ஏழு ஆட்டங்களில் விளையாடியுள்ள பஞ்சாப் அணி பெற்ற ஒரே ஒரு வெற்றியும் அது தான்.
இந்நிலையில், இரு அணியின் கேப்டன்களும் இன்ஸ்ட்டாகிராமில் லைவ் சேட் மூலம் கலந்துரையாடினர்.
“ஆர்.சி.பி அணியுடனான ஆட்டத்தில் எங்களுக்கு அதிர்ஷ்ட காற்று அதிகம் வீசும் என்ற நம்பிக்கை உள்ளது. கடந்த முறை விளையாடிய போதும் அதிர்ஷ்டம் எங்களுக்கு இருந்தது. அதே போல இந்த ஆட்டத்திலும் இருக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. உங்கள் அணி ஃபீல்டர்கள் நிச்சயம் கேட்ச்களை கோட்டை விடுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது” என ஜாலியாக சொன்னார் பஞ்சாப் கேப்டன் கே.எல்.ராகுல்.
அதற்கு பதில் கொடுக்கும் வகையில் பேசிய கோலி “நான் கடந்த முறை உங்களது கேட்சை எங்கு டிராப் செய்தேனோ அதே இடத்தில் தான் ஃபீல்டிங் செய்ய உள்ளேன். இந்த முறை பந்தை அடிப்பதற்கு முன்னர் ஒன்றுக்கு இரண்டு முறை யோசிக்கவும்” என வார்னிங் கொடுத்துள்ளார்.
Loading More post
முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைப்பு! -மத்திய சுகாதாரத்துறை
டாஸ் வென்ற ராஜஸ்தான் பந்துவீச்சு தேர்வு - டெல்லி அணி முதலில் பேட்டிங்
தமிழகத்தில் ஒரே நாளில் 7,987 பேருக்கு கொரோனா பாதிப்பு
'அந்நியன் கதை எனக்கே சொந்தம்’!- இயக்குநர் ஷங்கர் விளக்கம்!
செங்கல்பட்டில் கோவாக்சின் தயாரிக்க திட்டம்: பாரத் பயோடெக் உடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை
கோவாக்சின் Vs கோவிஷீல்டு Vs ஸ்புட்னிக்-வி: கொரோனா தடுப்பூசிகளின் வேறுபாடுகள்- ஒரு பார்வை
கடும் கொரோனா பாதிப்பைக் குறைக்க உதவும் தினசரி உடற்பயிற்சி: ஆய்வும் வழிகாட்டுதலும்
இரண்டு மாநிலங்கள், மூன்று இடங்கள்... இது ஹனுமனின் 'பிறப்பிடம்' சர்ச்சை!
கொரோனா தீவிரம் எதிரொலி: குறைந்த விலைக்கு 'ரெம்டெசிவிர்' கிடைக்க அரசு முயற்சி!