ஒடிசா: ஸ்வச் பாரத் கழிப்பறையில் 3 பேரக்குழந்தைகளுடன் வாழ்ந்த மூதாட்டி.

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

ஒடிசாவில் இரண்டு மாதங்களாக சிறிய ஸ்வச் பாரத் கழிப்பறையில் வாழ்ந்துவந்த ஒரு மூதாட்டி மற்றும் அவரின் மூன்று பேரக்குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளனர்.


Advertisement

image

இரண்டு மாதங்களுக்கும் மேலாக, ஒடிசா மாநிலத்தின் அங்குல் மாவட்டத்தில் உள்ள பைசானா கிராமத்தில் ஸ்வச் பாரத் மிஷனின் கீழ் கட்டப்பட்ட 3 அடி x 4 அடி அளவுள்ள சிறிய கழிப்பறையில் ஒரு மூதாட்டியும் அவரது மூன்று பேரக்குழந்தைகளும் வசித்து வந்த சம்பவம் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது. பாட்டி பிமலா பிரதன் மற்றும் இரு சிறுமிகள், ஒரு சிறுவன் ஆகியோர்தான் இக்கழிப்பறையில் வசித்துள்ளனர்.


Advertisement

இந்த பெண் முன்னதாக ஒரு மண் குடிசையில் வசித்து வந்துள்ளார், அது கனமழை காரணமாக இடிந்துவிட்டதால் இந்த கழிப்பறையில் வசிக்க ஆரம்பித்துள்ளனர். இதுபற்றி பேசிய அந்த மூதாட்டி “ எனது மகள் இறந்துவிட்டாள், இந்த குழந்தைகளின் அப்பாவும் இவர்களை கைவிட்டுவிட்டார். அதனால் நான் இவர்களை கவனித்துக்கொள்கிறேன். மண்வீடு மழையில் இடிந்ததால் இந்த கழிவறையில் தங்கினோம், திறந்த வெளியில் சமைத்தோம், இரவில் மழை பெய்யும்போது குழந்தைகள் உள்ளே தூங்கினார்கள். எனக்கு எந்த ஆவணமும் இல்லாத காரணத்தால் அரசின் உதவிகள் எதுவும் கிடைப்பதில்லை” என கூறினார்

உள்ளூர் சமூக ஆர்வலர்களின் தலையீட்டைத் தொடர்ந்து, அந்தப் பெண்ணும் குழந்தைகளும் தற்காலிகமாக பஞ்சாயத்து அலுவலகத்தில் தங்கவைக்கப்பட்டனர், பின்னர் தற்போது அரசின் புனர்வாழ்வு மையத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர்.

loading...

Advertisement

Advertisement

Advertisement