'100 மீ. தாண்டி அடிக்கப்படும் சிக்ஸர்களுக்கு கூடுதல் ரன் தேவை' கே.எல்.ராகுல் !

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

100 மீட்டர் தூரத்துக்கு மேல் அடிக்கப்படும் சிக்ஸர்களுக்கு கூடுதலாக ரன் வழங்க வேண்டும் என கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


Advertisement

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இன்றைய ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

ஷார்ஜாவில் இந்தப் போட்டி இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. விராட் கோலி தலைமையிலான பெங்களூரு அணி நடப்பு சீசனில் 7 போட்டிகளில் விளையாடி 5 வெற்றிகளைப் பதிவு செய்துள்ளது. ராகுல் தலைமையிலான பஞ்சாப் அணி விளையாடிய 7 போட்டிகளில் ஒரு வெற்றியை ‌மட்டுமே பதிவு செய்துள்‌ளது.


Advertisement

image

இவ்விரு அணிகளும் இதுவரை 2‌5 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. அவற்றில் பஞ்சாப் அணி 13 போட்டிகளிலும், பெங்களூரு அணி 12 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன‌.

இந்நிலையில் விராட் கோலியும், கே.எல்.ராகுலும் காணொலி விவாதத்தில் பங்கேற்றனர். அப்போது பேசிய ராகுல், அதிரடியாக விளையாடும் பெங்களூரு வீரர்கள் கோலியையும், டிவில்லியர்ஸையும், ஐபிஎல் தொடரிலிருந்து நீக்க வேண்டும் என கிண்டலாக குறிப்பிட்டார். குறிப்பாக இன்று நடைபெறும் ஆட்டத்தில் இருந்து நீக்க வேண்டும் எனத் தெரிவித்தார். மேலும் 100 மீட்டர் தாண்டி அடிக்கப்படும் சிக்ஸர்களுக்கு கூடுதல் ரன் தேவை என்றும் குறிப்பிட்டார்.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement