சாலை பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் பழங்கால உறை கிணறு கண்டுபிடிப்பு

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

கும்பகோணம் அருகே சோழன் மாளிகை கிராமம் வழியாக அமைக்கப்படும் புறவழிச்சாலை பணிக்காக தோண்டப்படும் இடங்களில் பழங்கால உறை கிணறு, மற்றும் பண்டைய மக்கள் பயன்படுத்திய பொருட்களை ஆராய்ச்சி மாணவன் தலைமையிலான குழுவினர் கண்டுபிடித்துள்ளனர். 


Advertisement

image 

கும்பகோணம் அருகில் உள்ள பட்டீஸ்வரம் ,சோழன்மாளிகை, உடையாளூர், பழையாறை, ஆரிய படை வீடு ,உள்ளிட்ட பகுதிகளை தலைமையிடமாகக் கொண்டு சோழர்கள் ஆட்சி புரிந்து வந்துள்ளனர். உடையாளூர் பகுதியில் ராஜராஜ சோழன் சமாதி இருப்பதாகவும் அது குறித்து தொல்லியல் ஆய்வும் நடைபெற்று வருகிறது.


Advertisement

இந்நிலையில் தற்போது தஞ்சாவூர் - விக்கிரவாண்டி இடையே நான்கு வழிச்சாலைகளுக்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த சாலை பணிகள் கும்பகோணம் அருகில் உள்ள சோழன் மாளிகை கிராமம் வழியாக செல்கிறது. இந்த பாதை அமைக்கும் பணிக்காக பள்ளம் தோண்டும்போது பழங்கால மண்பாண்டங்கள் மனித எலும்புகள் உடைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. 

image
மேலும் உறைகிணறு ஒன்றும் கண்டறியப்பட்டது. இந்தப் பொருட்கள் பண்டைய தமிழர்களின் வரலாற்றை உணர்த்தும் வகையில் இருப்பதாகவும், இது குறித்து தொல்லியல் துறையினர் விரிவான ஆய்வு நடத்த வேண்டுமென ஆராய்ச்சி மாணவர் டார்வின் கண்ணன் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். தமிழர்களின் பண்டைய கால பொருட்களை கீழடியில் கண்டுபிடித்து தற்போது ஆய்வு நடத்தி வருவதை போலவே இந்த பகுதிகளிலும் ஆய்வு நடத்தினால் சோழர்கள் கால வாழ்வியல் முறைகளை கண்டுபிடிக்க வாய்ப்புள்ளது. 

loading...

Advertisement

Advertisement

Advertisement