இதய நோயால் பாதிக்கப்பட்ட பெண்ணின் மகளுக்கு உதவிய கமிஷனரின் மகள்கள்!

Daughters-of-the-Commissioner-who-assisted-the-daughter-of-a-woman-suffering-from-heart-disease

ஆண்ட்ராய்டு மொபைல் இல்லாத காரணத்தினால் ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்க முடியாமல் இருந்த மாணவிக்கு புதிய ஆண்ட்ராய்ட் மொபைல் வழங்கப்பட்டது.


Advertisement

கொரோனா பொதுமுடக்கத்தால் ஏற்பட்ட வறுமையில் இருந்து மீளமுடியாத ஆட்டோ ஓட்டுநரான தந்தை. இதயநோயால் பாதிக்கப்பட்ட தாய். வாட்டும் வறுமை. இதைக்கடந்து வாழ்வில் படித்து முன்னேற வேண்டும் என்ற லட்சியத்துடன் 9 ஆம் வகுப்பு படித்து வரும் மாணவி சென்னை தண்டையார்பேட்டையை சேர்ந்த பவித்ரா. இவர் செல்போன் இல்லாத காரணத்தினால் ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்க முடியாமல் சிரமப்பட்டு வந்தார்.

image


Advertisement

இதுகுறித்த செய்தி தொகுப்பை புதியதலைமுறை ஒளிபரப்பியது. இதை சென்னை காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வாலின் மகள்களான குனிதா அகர்வால், ஹர்ஷிதா ஆகிய இருவரும் பார்த்தனர். படிக்க முடியாமல் கஷ்டப்பட்டு வந்த மாணவி பவித்ராவுக்கு உடனே புதிய ஆண்ட்ராய்டு செல்போன் ஒன்றை இருவரும் வாங்கி, தனது தந்தையான சென்னை காவல்துறை ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் மூலம் வழங்க ஏற்பாடு செய்தனர்.

image

இதையடுத்து மகேஷ் குமார் அகர்வால் தன்னுடைய மகள்கள் வாங்கி கொடுத்த புதிய செல்போனை காவல் ஆணையர் அலுவலக மக்கள் தொடர்பு அலுவலகம் மூலம் மாணவி பவித்ராவிடம் வழங்க வைத்தார். செல்போனை பெற்றுக் கொண்ட மாணவி பவித்ரா சென்னை காவல்துறை ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் மற்றும் அவரது 2 மகள்களுக்கும் நன்றி தெரிவித்தார்.


Advertisement

image

சென்னை காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வாலின் 2 மகள்களும் தனியார் தொண்டு help E learning program என்ற இணைய தளம் மூலம் வசதியில்லாத ஏழை மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகளுக்கு தேவைப்படும் ஆண்ட்ராய்டு மொபைல், லேப்டாப் உள்ளிட்டவற்றை வழங்கி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement