"வைடு முடிவுகளில் கேப்டன்களுக்கும் வாய்ப்பு வேண்டும்"-விராட் கோலி !

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

கிரிக்கெட்டில் வைடு தொடர்பான முடிவுகளை எடுக்கும்போது கேப்டன்களுக்கும் ரிவியூ வாய்ப்புத் தர வேண்டும் என்று ஆர்சிபி கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.


Advertisement

image

சிஎஸ்கே - ஹைதராபாத் இடையிலான போட்டி இரு தினங்களுக்கு முன்பு நடைபெற்றது. அப்போது ஹைதராபாத் அணி 19 ஆவது ஓவரை விளையாடியபோது 19வது ஓவரில் ஷர்துல் தாக்கூர் வீசிய பந்தை வைடு என அறிவிக்க அம்பயர் கையை எடுத்தார். ஆனால் அந்தநேரம் பார்த்து நடுவரை தோனி முறைத்து பார்க்க, வைடு கொடுக்காமல் அம்பயர் செய்கையை மாற்றினார். சிஎஸ்கே கேப்டன் தோனியின் இந்த செயல் சர்ச்சையை ஏற்படுத்தியது.


Advertisement

image

இது குறித்துப் பேசிய விராட் கோலி " வைடு அல்லது இடுப்பு உயரத்துக்கு மேல் வரும் புல்டாஸ் பந்துகள் நோ-பால் போன்ற நடுவர் முடிவுகளின் மீது பீல்டிங் கேப்டனுக்கு ரிவியூ வாய்ப்புத் தர வேண்டும். ஏனெனில் ஐபிஎல் தொடர் வரலாற்றுச் சிறப்புமிக்கது. இது போன்ற சின்னச் சின்ன விஷயங்கள் பெரிய விளைவுகளை ஏற்படுத்தி விடும். ஒரு வேளை ஒரு ரன்னில் போட்டியை தோற்கும்போது ஏதாவது ஒரு தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய முடியாத நிலையில் அது பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்" என்றார் அவர்.

loading...

Advertisement

Advertisement

Advertisement