பாஜகவில் இணையப் போகிறேனா?: திமுகவின் பூங்கோதை ஆலடி அருணா விளக்கம்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

திமுக எம்எல்ஏவான பூங்கோதை ஆலடி அருணா பாஜகவில் இணையப்போவதாக செய்திகள் பரவிய நிலையில் அது குறித்து அவரே விளக்கம் அளித்துள்ளார்.


Advertisement

திமுகவின் முக்கிய பெண் எம்எல்ஏக்களில் ஒருவர் பூங்கோதை ஆலடி அருணா. கருணாநிதி தலைமையிலான திமுக ஆட்சிக்காலத்தில் அமைச்சராகவும் பதவி வகித்தவர். தற்போது எம்எல்ஏவாகவும் உள்ளார்.

இந்நிலையில் பூங்கோதை ஆலடி அருணா பாஜகவில் இணையப்போவதாக சமீபத்தில் செய்திகள் பரவின. இதுகுறித்து விளக்கம் அளித்த அவர், அவை அனைத்தும் பொய்யான மற்றும் போலி செய்திகள் என்றார். அந்த செய்திகளை பார்த்து தானே அதிர்ச்சி அடைந்துவிட்டதாகவும் குறிப்பிட்டார். தான் ஒருபோதும் பாசிச பாஜகவுடன் இணையமாட்டேன் எனவும் அவர் திட்டவட்டமாக குறிப்பிட்டார்.


Advertisement

image

போலி செய்தியை பரப்பியதற்கு பின்னாள் தென்காசியை சேர்ந்த பாஜக ஆதரவாளர் இருப்பதாவும் அவர் மீது கடையம் காவல்நிலையத்தில் ஏற்கெனவே வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். போலி செய்திகளை பரப்பியதற்காக அவர் வருத்தம் தெரிவித்ததாகவும் கூறியுள்ளார்.

தற்போது திமுக உறுப்பினர்களை கட்சியில் இணைக்கும் பணிகளில் மும்முரமாக இருப்பதாக தெரிவிக்கும் அவர் தற்போது வரை தனது தொகுதியில் 12,000 உறுப்பினர்களை இணைத்துள்ளதாகவும் கூறியுள்ளார்.


Advertisement

 

 

loading...

Advertisement

Advertisement

Advertisement