டிரைவர் சீட்டில் ஆளே இல்லாமல் ஓடும் கார்: வைரல் வீடியோ

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

தமிழகத்தின் தேசிய நெடுஞ்சாலையில் டிரைவர் சீட்டில் ஆளே இல்லாமல் ஓடும் காரின் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.


Advertisement

தாகூர் செர்ரி என்பவரின் ஃபேஸ்புக் பக்கத்தில்,  பதிவிடப்பட்டுள்ள அந்த வீடியோவில்  பழைய பிரீமியர் பத்மினி கார் ஒன்று தேசிய நெடுஞ்சாலையில் மற்ற வாகனங்களுடன் வேகமாகச் செல்கிறது. ஆனால், டிரைவர் சீட்டில் யாரும் இல்லை. கோ டிரைவர் சீட்டில் மட்டும் வயதான முதியவர் அமர்ந்திருக்கிறார். காரின் பின்னால் இருந்து பார்க்கும்போது டிரைவர் இல்லாமல் காரை யார் இயக்குகிறார்கள் என்ற பயம் தொற்றிக்கொள்கிறது.

பிறகு காரை பின் தொடர்ந்து செல்லும் வாகனத்தில் இருப்பவர்கள் காரின் அருகே சென்று பார்க்கும்போதுதான் தெரிகிறது. கோடிரைவர் சீட்டில் இருப்பவர் ஸ்டியரிங் மூலம் காரை இயக்கிக்கொண்டிக்கிறார். பொதுவாக நாம் இயக்கும் கார்களில் டிரைவரிடம் தான் அனைத்துக் கட்டுப்பாடுகளும் இருக்கும். ஆனால், கார் ஓட்டுனர் பயிற்சி பள்ளிகளில் டிரைவருக்கு எப்படி அத்தனை கட்டுப்பாடுகளும் கொடுக்கப்பட்டுள்ளதோ, அதேபோல கோ டிரைவர் சீட்டில் அமர்ந்திருப்பவர்களுக்கும் இருக்கும்.


Advertisement

image

புதிதாக டிரைவிங் கற்பவர்கள்  ஏதாவது தவறு செய்தால் கோடிரைவர் சீட்டில் அமர்ந்திக்கும் பயிற்சியாளர்கள் காரை கட்டுப்படுத்துவார்கள். அப்படித்தான் அந்த முதியவரும் கட்டுப்படுத்துகிறார் என்று கருத்திட்டு வருகிறார்கள் நெட்டிசன்கள்.

 


Advertisement

 

 

 

loading...

Advertisement

Advertisement

Advertisement