மருத்துவமனையின் 3வது மாடியில் இருந்து கீழே விழுந்து சலவைத் தொழிலாளி உயிரிழப்பு

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

கன்னியாகுமரி மாவட்டம் சுங்கான்கடை பகுதியில் இயங்கி வரும் தனியார் மருத்துவமனையின் மூன்றாவது மாடியில் இருந்து கீழே விழுந்து சலவைத் தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.  


Advertisement

image

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே ஈசாந்திமங்கலம் பகுதியை சேர்ந்தவர் ஐயப்பன் (42). இவர் சுங்கான்கடை பகுதியிலுள்ள முத்து நரம்பியல் மருத்துவமனையில் சலவை தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார்.


Advertisement

வழக்கம்போல் அவர், இன்று மாலை பணியில் இருக்கும்போது திடீரென மூன்றாவது மாடியில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்தார். சம்பவத்தை அறிந்து அவரது உறவினர்கள் சம்பந்தப்பட்ட மருத்துவமனைக்குச் சென்று விசாரித்த போது சரியாக பதில் அளிக்கவில்லை என தெரிகிறது.

 image

 வழக்கமாக பணி செய்து கொண்டிருக்கும் பகுதியில் இருந்து அவர் தவறி விழுவதற்கு வாய்ப்பு இல்லை எனவும், ஏதேனும் பிரச்னை நடந்திருக்கலாம் என உறவினர்கள் கூறுகின்றனர். சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த இரணியல் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பியதோடு உயிரிழப்புக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Advertisement

 image

நாகர்கோவில் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பிரபலமான மருத்துவமனையின் மூன்றாவது மாடியிலிருந்து தொழிலாளி கீழே விழுந்து இறந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

loading...

Advertisement

Advertisement

Advertisement