5, 10 பைசாவுக்கு பிரியாணி - தருமபுரி உணவகத்தில் குவிந்த மக்கள்..!

Biryani-Restaurant-with-best-offer-in-dharmapuri

தருமபுரியில் புதிதாக திறக்கப்பட்ட உணவகத்தில் பத்து பைசா,5 பைசா நாணயத்தை கொடுத்தால் பிரியாணி தருவதாக அறிவித்ததால், தனி மனித இடைவெளியின்றி ஏராளமானோர் பிரியாணி வாங்க குவிந்தனர்.


Advertisement

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த ஒகேனக்கல் பகுதியை சேர்ந்தவர் பாலாஜி. எம்சிஏ பட்டதாரியான இவர் கடந்த மூன்று ஆண்டுகளாக சென்னை மற்றும் பெங்களூர் பகுதிகளில் மென்பொருள் நிறுவனங்களில் பணியாற்றி வந்துள்ளார். தற்போது தருமபுரி இண்டூர் பகுதியில் புதியதாக உணவகம் ஒன்றை தொடங்கியுள்ளார். வழக்கமாக சென்னை, மதுரை போன்ற பெருநகரங்களில் வாடிக்கையாளர்களை கவர்வதற்கு துவக்க நாளன்று அதிரடி ஆஃபர்களை அறிவிப்பார்கள்.

image


Advertisement

அதேபோல் ஒரு ஆஃபரை தன்னுடைய உணவகத்திற்கும் அறிவித்துள்ளார் பாலாஜி. சற்று வித்தியாசமாக கடை திறக்கப்படும் முதல் நாளில், பத்து பைசா நாணயத்தை கொண்டு வருபவர்களுக்கு சிக்கன் பிரியாணி என விளம்பரம் செய்தார். இதனையடுத்து இன்று காலையில் இருந்து கிராம மக்கள் ஏராளமானோர் பத்து பைசா நாணயத்துடன் குவிந்தனர்.

தொடர்ந்து கடையில் பத்து பைசா நாணயத்தை பெற்றுக்கொண்டு டோக்கன் வழங்கப்பட்டது. வாடிக்கையாளர்கள் டோக்கனை பெற்றுக் கொண்டு சிக்கன் பிரியாணி வாங்கி சென்றனர். இதனால் கடை திறந்த சில மணி நேரங்களில் பிரியாணி முழுவதும் விற்றுத் தீர்ந்தன. பிரியாணி வாங்க வந்த பெரும்பாலானோர் முகக்கவசம் அணியாமலும், தனிமனித இடைவெளியை பின்பற்றாமலும் இருந்தனர்.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement