Noooooooooo.. - கூலான தோனியையே சூடாக்கிய சர்மா...! வீடியோ

MS-Dhoni-loses-his-cool-after-Karn-Sharma-bowls-expensive-over

நடப்பு சீசனில் அடுத்தடுத்த தோல்விகளால் துவண்டு, அணியையே மறுகட்டமைப்பு செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருந்தது சென்னை அணி. கேப்டன் தோனியோ சென்னை அணி என்னும் கப்பலில் பல ஓட்டைகள் உள்ளது என கூறியிருந்தார். அதிரடி காட்டாமல் தத்தளிப்பதை விட 17 ஓவர்களில் ஆல் அவுட் ஆனாலும் விளாசுவதே மேல் என்னும் கருத்தையும் அவர் கூறியிருந்தார். அதன் வெளிப்பாடு ஹைதராபாத்க்கு எதிரான போட்டியில் தென்பட்டது. அதற்கான முனைப்பை டாஸ் போட்டதில் இருந்தே காட்டியது.


Advertisement

image

ஓப்பனிங் பேட்ஸ்மேன், பந்துவீச்சாளர்கள் தேர்வு, பீல்டிங் செட்டப் என தோனி பல முடிவுகளை தனக்கே உரித்தான பாணியில் மாற்றி அமைத்து வெற்றியை நோக்கி நடைபோட்டார். ஆரம்பம் முதலே ரன் எடுக்க ஹைதராபாத் திணறினாலும் கடைசியில் பரபரப்பு தொற்றிக்கொண்டது. வெற்றிபெற்றே ஆகவேண்டிய ஒரு கட்டாயத்தில் இருந்ததால் சிஎஸ்கே அணியும் பரபரப்பாக இருந்தது.


Advertisement

குறிப்பாக தோனி சரியான காய்நகர்த்தலை செய்தார். ஆனால் சுழற்பந்து வீச்சாளர் கரன் சர்மா தோனியை சோதித்தார். கூல் கேப்டன் தோனியை சூடாக்கினார் கரன் சர்மா. கடைசி கட்டத்தில் 3 ஓவருக்கு 46 அடிக்க வேண்டிய நிலையில் இருக்கும் போது தொடக்கத்திலே ஷார்ட் பந்தை வீசி 4 ரன்கள் கொடுத்தார் சர்மா. அடுத்து வில்லியம்சை அவுட் ஆக்கினார். அப்போது ரசிகர்கள் சற்றேன் பெருமூச்சுவிட்டனர். ஆனால் அடுத்து 2 பவுண்டரிகள், ஒரு சிக்ஸ் என ரன்களை வாரி வழங்கினார் சர்மா. புல் டாஸ், ஷார்ட் பால் என பந்துகளை மிகவும் எளிதாகவே வீசினார் சர்மா.


Advertisement

இதனால் கடுப்பான தோனி சர்மாவிடம் சூடான வார்த்தைகளை வீசினார். கடைசிப்பந்தும் ஒரு பவுண்டரியை கொடுக்க நிதானம் இழந்த தோனி 'நகிகிகிகி' (No) என கத்தினார். இக்கட்டான நிலையில் 6 பந்துகளில் 19 ரன்களை விட்டுக்கொடுத்து ஆட்டத்தை மேலும் இக்கட்டான நிலைக்கு கொண்டு வந்தார் சர்மா. ஆனால் கடைசி இரண்டு ஓவர்கள் சிறப்பாக வீசப்பட்டதால் 20 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை வெற்றி பெற்றது.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement