தேனி: காக்கை கூடாக காட்சியளிக்கும் கண்காணிப்பு கேமராக்கள்!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

தேனியில் குற்றங்களை தடுப்பதற்காக நகரின் மைய பகுதிகளில் அமைக்கபட்ட சிசிடிவி கேமரா பழுதடைந்து, பராமரிப்பின்றியும் காக்கா கூடாகவும் காணப்படுவதால் குற்றங்களை கண்டுபிடிக்க முடியாத சூழல் நிலவுவதாக மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். 


Advertisement

image

தேனி நகரில் பெருகி வரும் குற்றங்களை தடுப்பதற்காக கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னர் சுமார் 10 லட்சம் ரூபாய் மதிப்பில் 62 இடங்களில் சிசிடிவி கேமராக்களை மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பொருத்தபட்டது. இதன் காரணமாக குற்ற சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் உடனடியாக கண்டுபிடிக்கப் பட்டனர். மேலும் குற்ற சம்பவங்கள் நடைபெறாமலும் தடுக்கபட்டன. இந்த நிலையில் காவல்துறையினரால் பொருத்தபட்ட சிசிடிவி கேமராக்கள் கடந்த 1 ஆண்டுகளாக போதிய பராமரிப்பின்றி அனைத்தும் செயல் இழந்தன.


Advertisement

இந்த கேமராக்கள் பல இடங்களில் காணாமலும் போயுள்ளன. மேலும் பல கேமராக்கள் வெறும் கூடுகளாக மட்டும் உள்ளது. சில இடங்களில் அவை பறவைகள் கூடுகட்டி வசிக்கும் இடமாக மாறி விட்டது. இதன் காரணமாக தேனி நகரில் கடந்த 1 ஆண்டுகளாக மீண்டும் குற்ற சம்பவங்கள் பெருக துவங்கியுள்ளன. இருசக்கர வாகன திருட்டு, செயின் பறிப்பு, வீடுகளில் திருட்டு சம்பவம் என பல குற்ற சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.

image

இந்த குற்ற சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியாமல் காவல்துறையினர் வணிக நிறுவனங்களில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி காட்சிகளை வாங்கி அதன் அடிப்படையில் குற்றவாளிகளை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே காவல்துறையினர் விரைந்து நடவடிக்கை எடுத்து செயல் இழந்து போயுள்ள சிசிடிவி கேமராக்களை மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வந்து குற்ற சம்பவங்களை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement