தனிஷ்க் நகைக்கடை மீது தாக்குதல்..? மன்னிப்புக் கடிதம் எழுதிய மேனேஜர்?

Threat-Calls-To-Tanishq-Store-In-Gujarat--Police-Patrolling-Area

குஜராத் மாநிலம் காந்திதாம் பகுதியில் உள்ள தனிஷ்க் நகைக்கடை ஒரு குறிப்பிட்ட கும்பலால் தாக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.


Advertisement

கடந்தவாரம் தனிஷ்க் ஜுவல்லரி நிறுவனத்தின் விளம்பரம் சர்ச்சையாகி இருக்கிறது. அந்த விளம்பரத்தில் இந்துமத கர்ப்பிணி பெண்ணுக்கு அவரது
இஸ்லாமிய மாமியார் வளைகாப்பு நடத்துவதுபோன்ற காட்சிகள் இடம்பெற்றிருந்தன. ‘இது லவ் ஜிகாத்தை ஊக்குவிப்பதுபோல் இருக்கிறது’ என்று
சிலர் கண்டனம் தெரிவித்தார்கள். அதனைத் தொடர்ந்து ட்விட்டரில் ‘boycott tanishq’ என்ற ஹேஷ்டாக்கும் ட்ரெண்டிங் ஆனது.
எதிர்ப்புகள் கிளம்பியதால், தனிஷ்க் நிறுவனம் அந்த விளம்பர வீடியோவை யூடியூப் பக்கத்தில் நீக்கியுள்ளது.

image


Advertisement

இதனைத்தொடர்ந்து, தனிஷ்க் நிறுவனம் விளக்கமும் அளித்தது. அதில், “வெவ்வேறு வாழ்க்கை சூழலை கொண்ட மக்கள் ஒன்றாக இணைந்து
கொண்டாட வேண்டும், ஒற்றுமையின் அழகை கொண்டாட வேண்டும் என்ற நோக்கத்தில்தான் இந்த விளம்பரம் எடுக்கப்பட்டது. ஆனால், இந்த
விளம்பரத்திற்கு மாறுபட்ட கருத்துக்கள் முன் வைக்கப்பட்டுள்ளன.

கவனக்குறைவாக உணர்ச்சிகளைத் தூண்டியதில் நாங்கள் மிகுந்த வருத்தப்படுகிறோம். எங்கள் ஊழியர்கள் வாடிக்கையாளர்கள் அனைவரின் மன
உணர்வுகளையும் நல்வாழ்வையும் மனதில் கொண்டு இந்த விளம்பரத்தை திரும்பப் பெறுகிறோம்’ எனத் தெரிவித்தது.

image


Advertisement

இந்நிலையில் குஜராத் மாநிலம் காந்திதாம் பகுதியில் உள்ள தனிஷ்க் நகைக்கடை ஒரு குறிப்பிட்ட கும்பலால் தாக்கப்பட்டதாக தகவல்
வெளியாகியுள்ளது. மேலும் அந்த குறிப்பிட்ட நகைக்கடையின் மேனேஜரை மிரட்டி மன்னிப்புக்கடிதம் எழுதி வாங்கப்பட்டதாகவும் டைம்ஸ் நவ் செய்தி வெளியிட்டுள்ளது. மேற்கு வங்க இளைஞர் காங்கிரஸ் இந்த தகவலை வெளியிட்டுள்ளதாகவும் அந்த செய்தியில் குறிப்பிட்டுள்ளது.

ஆனால் போலீசார் தெரிவித்ததாக என்டிடிவி வெளியிட்டுள்ள செய்தியின்படி, குறிப்பிட்ட நகைக்கடைக்கு மிரட்டல் வந்தது உண்மைதான். அதனை
அடுத்து போலீசார் நோந்துப்பணியிலும் ஈடுபட்டுள்ளனர். அந்தப்பகுதியில் போராட்டமோ ஆர்ப்பாட்டமோ, பிரச்னையோ இல்லை என
தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நகைக்கடை தாக்கப்பட்டதாக வெளியான தகவலுக்கும் போலீசார் மறுப்பு தெரிவித்துள்ளனர் என என்டிடிவி குறிப்பிட்டுள்ளது.

இது குறித்து தெரிவித்துள்ள நகைக்கடையின் மேனேஜர், எங்களுக்கு மிரட்டல் வந்தது. ஆனால் கடையில் தாக்குதல் ஏதும் நடத்தப்படவில்லை. போலீசார் எங்களுக்கு உறுதுணையாக உள்ளனர் என தெரிவித்துள்ளார்

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement