"ஜூலை மாதத்திற்குள் 20 கோடி பேருக்கு கொரோனா தடுப்பு மருந்து"- மத்திய அமைச்சர் தகவல் !

Covid-Vaccines-will-be-ready-by-July-says-Central-Minsiter

அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் இந்தியாவில் கொரோனா தடுப்பு மருந்து சந்தைப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் கூறியுள்ளார்.


Advertisement

கொரோனா தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தலைமையில் மத்திய அமைச்சர்கள் குழு கூட்டம் 21-வது முறையாக காணொலி காட்சி மூலம் நடைபெற்றது.

கூட்டத்தில் பேசிய மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் சதவீதம் உலகத்திலேயே இந்தியாவில் அதிகம் என்றும், உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிர் இழந்தோர் சதவீதம் இந்தியாவில் தான் குறைவு என்றும் தெரிவித்தார். மேலும், கொரோனா எண்ணிக்கை இரட்டிப்பாவது இந்தியாவில் 3 நாட்களில் இருந்து 75 நாட்களாக உயர்ந்துள்ளதாகவும் கூறினார்.


Advertisement

ஒன்றுக்கும் மேற்பட்ட தடுப்பு மருந்துகள் அடுத்த ஆண்டு விநியோகத்திற்கு வரும் என்றும் 20 கோடி பேருக்கு ஜூலை மாதத்திற்குள் அதை வழங்கமுடியும் என்றும் அமைச்சர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement