ட்விட்டரில் தமிழக முதல்வரின் ஃபாலோவர்ஸ் எண்ணிக்கை 10 லட்சத்தைக் கடந்தது!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc
ட்விட்டரில் எடப்பாடி பழனிசாமியின் ஃபாலோவர்ஸ் எண்ணிக்கை 10 லட்சத்தை கடந்துள்ளது.
 
தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி, 2017 மார்ச் மாதம் ட்விட்டரில் இணைந்தார். கொரோனா காலத்தில், ட்விட்டரில் பொதுமக்கள் விடுக்கும் கோரிக்கை மீது, அதிகாரிகள் மூலம் உடனடி நடவடிக்கை மேற்கொண்டு தீர்வுகாண்கிறார். இதனால் பொதுமக்கள் பலரும் தங்களது கோரிக்கைகளை ட்விட்டர் மூலமாக முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வருகின்றனர்.
 
image
 
எடப்பாடி பழனிசாமியின் ட்விட்டர் பக்கத்தில் பதிவாகிவரும் கோரிக்கைகளை ஏற்று, ஆபத்தான நிலையில் இருப்பவர்கள், வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் சிக்கி தவிக்கும் தமிழர்களை மீட்டு தமிழகத்திற்கு கொண்டு வருவது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைளை அதிகாரிகள் உடனுக்குடன் மேற்கொண்டு வருகின்றனர்.
 
அதேபோல, அரசின் பல்வேறு சிறப்புத் திட்டங்களையும், செயல்பாடுகளையும் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதிவிட்டு வருகிறார். இதன் மூலமாக அவரது அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கை பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதன்படி முதலமைச்சரின் ட்விட்டர் கணக்கில் அவரை பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை 10 லட்சத்தை கடந்துள்ளது.
 
திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தை 18 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பின்பற்றி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
loading...

Advertisement

Advertisement

Advertisement