வலுவான நிலையில் டெல்லி... வேற லெவல் ஆட்டத்தை வெளிப்படுத்துமா ராஜஸ்தான்?

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இன்றைய ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.


Advertisement

துபாயில் நடைபெறும் இந்தப் போட்டி இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. ஸ்ரேயஸ் அய்யர் தலைமையிலான டெல்லி அணி நடப்பு சீசனில் 7 போட்டிகளில் விளையாடி 5 வெற்றிகளைப் பதிவு செய்துள்ளது. ராஜஸ்தான் அணி விளையாடிய 7 போட்டிகளில் 3 வெற்றிகளைப் பதிவு செய்துள்‌ளது.

image


Advertisement

இவ்விரு அணிகளும் இதுவரை 2‌1 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. அவற்றில் டெல்லி அணி 10 போட்டிகளிலும், ராஜஸ்தான் அணி 11 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன‌. ‌நடப்பு சீசனில் ஆதிக்கம் மிகுந்து வலம் வரும் டெல்லி மற்றும் உள்ளூர் வீரர்களால் வலுப்பெற்றுள்ள ராஜஸ்தான் அணிகளின் பலம் மற்றும் பலவீனம் குறித்து அறிவோம்.

முத்திரை பதிக்கும் 5 வெற்றிகளை சீசனின் முதல் பாதியில் பதிவு செய்து புள்ளிகள் பட்டியலில் வலுவான இடத்தில் அமர்ந்துள்ளது டெல்லி அணி. பேட்டிங் மேல்வரிசையில் தவான், ஸ்ரேயஸ் அய்யர், ப்ரித்வி ஷா ஆகியோர் தூண்களாக உள்ளனர். ரிஷப் பந்தின் காயம் அணிக்கு சோகம். இருப்பினும் அவரது இடத்தை அலெக்ஸ் கேரி பூர்த்தி செய்வார் என நம்பப்படுகிறது.

image


Advertisement

மத்திய வரிசையில் ஹெட்மெய்ர், ஸ்டொய்னிஸ் ஆகியோரும் கூடுதல் பலம். நாட்ஜ், ரபாடா ஆகிய இருவரும் எதிரணியிருக்கு கடும் நெருக்கடி தரும் பந்து வீச்சாளர்களாக உள்ளனர். சுழற்பந்து வீச்சாளர்கள் அஷ்வின், அக்ஷர் பட்டேல் இருவரும் அணிக்கு பக்கபலம். உள்ளூர் வீரர்களின் அருமையான திறன் வெளிப்பாட்டால் எழுச்சி கண்டுள்ளது ராஜஸ்தான் அணி. பேட்டிங்கில் சாம்சன், ஸ்மித் ஆகியோர் ஃபார்முக்கு வர திணறுகின்றனர்.

பட்லர் மட்டுமே மேல்வரிசையில் ஆறுதல். அணிக்கு திரும்பியுள்ள ஸ்டோக்ஸ் பெரிதளவில் நம்பிக்கையளிக்கவில்லை. மத்திய வரிசை ஆல்ரவுண்டர்கள் திவாட்டியா மற்றும் ரியன் பரக் புதிய நாயகர்களாக உருவெடுத்துள்ளது அணிக்கு நல்ல செய்தி. வேகப் பந்து வீச்சில் ஆர்ச்சர் மட்டுமே அசுர பலம். உனத்கட், அங்கித் ராஜ் பூத் ஆகியோர் ரன்களை வாரி இறைப்பது பலவீனமே.

அடுத்தடுத்த வெற்றிகளைப் பதிவு செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ள ராஜஸ்தான் அணி, நடப்பு சீசனின் முதன்மை அணிகளில் ஒன்றாக வலம் வரும் டெல்லிக்கு எந்தளவுக்கு ஈடு கொடுக்கும் என்பதே இன்றைய போட்டியின் சுவாரஸ்யம்.

loading...

Advertisement

Advertisement

Advertisement