சேலத்தில் உயிரோடு இருந்த முதியவரை குளிரூட்டப்பட்ட சவப்பெட்டியில் வைத்து உயிரிழப்பதற்காக காத்திருந்த அவலம் நிகழ்ந்துள்ளது.
கந்தம்பட்டி பழைய ஹவுசிங் போர்டு பகுதியைச் சேர்ந்த 78 வயதான பாலசுப்பிரமணியகுமார், சகோதரர் சரவணன் மற்றும் குடும்பத்தினருடன் வசிக்கிறார். திங்களன்று பாலசுப்பிரமணிய குமார் இறந்துவிட்டதாகக் கூறி, 70 வயதான சரவணன் குளிரூட்டப்பட்ட சவப்பெட்டியை வரவழைத்துள்ளார்.
பெட்டியை திரும்ப எடுத்துச் செல்வதற்காக வந்தவர்கள், அந்தப் பெட்டிக்குள் முதியவர் உயிருடன் இருப்பதைப் பார்த்து அதிர்ந்துபோயினர். அவரது கைகள் கட்டப்பட்டிருந்ததோடு, கண்கள் திறந்திருந்தது. இதுபற்றி கேட்டபோது,இன்னும் சிறிது நேரத்தில் உயிர் போய் விடும் என்று சரவணன் கூறியுள்ளார்.
இந்த பதிலால் மேலும் அதிர்ச்சியடைந்த குளிர்பதனப்பெட்டிக்காரர்கள், அப்பகுதியைச் சேர்ந்தவர்களிடம் இதுபற்றி கூறியுள்ளனர். அங்கு வந்த அக்கம்பக்கத்தினர், 108 ஆம்புலன்ஸ் வாகனத்தை வரவழைத்து முதியவரை சிகிச்சைக்காக அனுப்பினர். தகவலின்பேரில் வந்த காவல்துறையினர், முதியவர் கையாளப்பட்ட விதம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Loading More post
புதுச்சேரியில் தனித்து நிற்கவும் தயார்: கே.எஸ்.அழகிரி பேட்டி!
ஜன.27இல் சசிகலா விடுதலையாவது உறுதி! 22 ஆம் தேதி அதிமுக ஆலோசனை கூட்டம் அறிவிப்பு
கொரோனா பாதிப்பு: தீவிர சிகிச்சையில் அமைச்சர் காமராஜ்!
மருத்துவர் சாந்தாவுக்கு செவிலியர்கள் பிரியாவிடை! இறுதி ஊர்வலத்தில் ஏராளமானோர் பங்கேற்பு
'சசிகலாவை இணைக்கணும்', 'இணைக்கக்கூடாது' - அதிமுகவின் பிளவும் பழனிசாமியின் 'நகர்வு'களும்!
PT Web Explainer: 'மீட்பர்' வரிசையில் இந்தியா... தடுப்பூசிக்கு ஏழை நாடுகள் எங்கே போகும்?
'சசிகலாவை இணைக்கணும்', 'இணைக்கக்கூடாது' - அதிமுகவின் பிளவும் பழனிசாமியின் 'நகர்வு'களும்!
அமெரிக்க அதிபர் நிர்வாகத்தில் பதவியேற்பு எந்த அளவுக்கு முக்கியமானது? - ஒரு பார்வை
"டாக்டர் சாந்தா... அடையாறின் மற்றோர் ஆலமரம்!" - நெட்டிசன்களின் ட்வீட்டாஞ்சலி