சுகாதார ஆய்வாளர் போல் நடித்து சிறுமிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட வங்கி ஊழியர்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

கன்னியாகுமரி மாவட்டம் நித்திரவிளை சுற்றுவட்டார பகுதிகளில் வீடு வீடாக சென்று கொரோனா பரிசோதனை என வீட்டில் தனியாக இருக்கும் சிறுமிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட போலி சுகாதார ஆய்வாளர் கைது செய்யப்பட்டார்.


Advertisement

 image

கன்னியாகுமரி மாவட்டம் நித்திரவிளை, புதுக்கடை சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு செல்லும் டிப்டாப் ஆசாமி ஒருவர், தான் அரசு சுகாதார ஆய்வாளர் என்று கூறி கொரோனா சோதனை ஈடுபட்டு வருவதாகவும், அப்போது வீடுகளில் தனியாக இருக்கும் சிறுமிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு வருவதாகவும் புகார்கள் எழுந்தது.


Advertisement

ஆனால் யாரும் புகார் அளிக்க முன்வராத நிலையில் அவரது இந்த நடவடிக்கைகள் எடுக்கப்படாமல் தொடர்ந்தது. இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன் இதேபோல் பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் அந்த டிப்டாப் ஆசாமி குறித்து குளச்சல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்தனர்.

image

இதனையடுத்து அந்த சுற்றுவட்டார பகுதிகளில் போலீசார் ரகசியமாக கண்காணித்து வந்தனர். இந்நிலையில் இன்று அந்த ஆசாமி ஒரு வீட்டிற்குச் சென்று சுகாதார ஆய்வாளர் எனக்கூறி வீட்டிற்குள் நுழைய முயன்ற போது போலீசார் அவரை சுற்றி வளைத்து பிடித்தனர். பின்பு குளச்சல் அனைத்து மகளிர் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.


Advertisement

விசாரணையில் அவர், கொல்லங்கோடு பகுதியை சேர்ந்த அபிலாஷ் பெர்லின் என்பதும் 41-வயதான இவர், தனியார் வங்கியில் கடன் வசூலிப்பாளராக இருப்பதும் தெரிய வந்தது. மேலும் இவர் கொரோனா காலத்தை பயன்படுத்தி சுகாதார ஆய்வாளர் என கூறி அந்த சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு சோதனை செய்ய சென்றுள்ளார்.

 image

அப்போது வீடுகளில் தனியாக இருக்கும் சிறுமிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு வந்ததும் தெரிய வந்தது. இதனையடுத்து அபிலாஷ் பெர்லின் மீது போக்சோ உள்ளிட்ட பல்வேறு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து நாகர்கோவில் மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

தனியார் வங்கி ஊழியர் ஒருவர் சுகாதார ஆய்வாளர் என கூறி வீடுகளில் தனியாக இருக்கும் சிறுமிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

loading...

Advertisement

Advertisement

Advertisement