போர்ச்சுகல் அணியின் கேப்டன் கிறிஸ்டியானா ரொனால்டோ கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது அந்நாட்டின் ஃபுட்பால் அசோசியேஷன்.
தற்போது ரொனால்டோ போர்ச்சுகல் அணிக்காக தேசிய கால்பந்தாட்ட லீக்கில் கால்பந்தாட்ட போட்டியில் விளையாடி வருகிறார்.
கடந்த ஞாயிறு அன்று பிரான்ஸ் அணியுடனான ஆட்டத்தில் விளையாடியிருந்தார் ரொனால்டோ.
கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள ரொனால்டோ உடல் ஆரோக்கியத்துடன் இருப்பதாகவும், அவருக்கு கொரோனா அறிகுறிகள் எதுவும் தென்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து நாளை நடைபெற உள்ள சுவீடன் அணியுடனான ஆட்டத்தில் ரொனால்டோ விளையாட மாட்டார் எனவும் சொல்லப்பட்டுள்ளது. போர்ச்சுகல் அணி வீரர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளது.
Loading More post
பிருத்வி ஷா - தவான் அதிரடி! சென்னையை வீழத்தியது டெல்லி கேபிடல்ஸ்!
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்காக ஜைக்கா நிதி நிறுவனத்துடன் ஒப்பந்தம் - ஆர்.டி.ஐ மூலம் தகவல்
தியேட்டரில் கூடுதலாக ஒரு காட்சி - தமிழகத்தில் புதிய கொரோனா தடுப்பு விதிமுறைகள்
அதிமுக கடலூர் எம்எல்ஏ சத்யா பன்னீர்செல்வம் உட்பட 6 பேர் கட்சியில் இருந்து நீக்கம்
தமிழகத்தில் 6 ஆயிரத்தை நெருங்கியது தினசரி கொரோனா பாதிப்பு