‘முதலில் உங்களை குறித்து யோசியுங்கள் தோனி’ ஷேவாக் அட்வைஸ்

Stop-thinking-about-other-players-and-think-of-yourself-first-Advice-TO-Dhoni-FROM-Shewag--

நடப்பு ஐபிஎல் சீசனில் புள்ளி பட்டியலில் பின்தங்கிய நிலையில் உள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. 


Advertisement

image

இந்த தொடரில் சென்னை தனது இருப்பை தக்கவைக்க சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. 


Advertisement

இந்நிலையில் சென்னியின் கேப்டன் தோனிக்கு அட்வைஸ் கொடுத்துள்ளார் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் வீரேந்திர ஷேவாக். 

 
 
 
View this post on Instagram

Bangalore Ke Akramit Haathi. Catch the fresh episode of 'Viru Ki Baithak' every morning only on Facebook Watch #CricketTogether

A post shared by Virender Sehwag (@virendersehwag) on


Advertisement

“முதலில் அணியில் உள்ள மற்ற வீரர்கள் குறித்து யோசிப்பதை நிறுத்திவிட்டு உங்களை குறித்து யோசியுங்கள் தோனி. சென்னை வெற்றி பெற வேண்டுமென்றால் நீங்கள் டாப் ஆர்டரில் இறங்கி விளையாட வேண்டும். அடுத்தவர்களை நம்பி இருக்காமல் நீங்களே அந்த இடத்தில் இறங்க வேண்டும். அது நிச்சயம் உங்களுக்கும், அணிக்கும் சாதகமாக அமையும்” என ‘VIRU KI BAITHAK’ நிகழ்ச்சியில் தெரிவித்துள்ளார் ஷேவாக். 

image

சர்வதேச கிரிக்கெட்டில் தோனி விளையாடி ஓராண்டுக்கு மேல் ஆவதால் அவரது ஃபார்மை மீட்டெடுக்க டாப் ஆர்டரில் களம் இறங்குவது சரியாக இருக்கும் என முன்னணி கிரிக்கெட் வல்லுநர்கள் தெரிவித்து வருகின்றனர். 

சென்னை நடப்பு ஐபிஎல் சீசனில் இதுவரை விளையாடிய ஏழு ஆட்டங்களில் ஐந்து தோல்வியை தழுவியுள்ளது. 

image

சன்ரைசர்ஸ் அணியுடனான போட்டியில் சென்னையின் வெற்றிக்காக தோனி போட்டுள்ள ஸ்கெட்ச் என்ன என்பதை அறிய கொஞ்சம் வெயிட் செய்ய வேண்டியுள்ளது. 

 

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement