நீண்ட நாட்களாக மறைத்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சாமுராய் நடிகை!

samurai-actress-anitha

தமிழில் வருஷமெல்லாம் வசந்தம், சாமுராய், சுக்ரன், நாயகன், மகாராஜா உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நடிகை அனிதா ஹசானந்தனி. தமிழ், தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழிகளில் ஹீரோயினாக நடித்தவர், தற்போது இந்தி சீரியல்களில் பிஸியாக நடித்து வருகிறார். இவரது கணவர் ரோகித் ரெட்டியும் சின்னத்திரையை சேர்ந்தவர்தான்.


Advertisement

image

கடந்த 2013 ஆம் ஆண்டு இருவரும் காதல் திருமணம் செய்துகொண்டார்கள். இந்நிலையில், நடிகை அனிதா தற்போது கர்ப்பிணியாக உள்ளார். இதனை கடந்த சனிக்கிழமை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் முதன்முறையாக தெரிவித்துள்ளார்.


Advertisement

image

ஆனால், அவர் அதற்கு முன்பே தனது புகைப்படங்களை வயிற்றை மறைத்தப்படி பூச்செண்டு வைத்தும் லூசான நீண்ட ஆடைகளை அணிந்தும் யாருக்கும் சந்தேகம் வராததுபோல் கடந்த செப்டம்பர் 26 ஆம் தேதி பகிர்ந்திருந்தார். எல்லோரும் சாதாரண புகைப்படங்கள் என்றுதான் நினைத்துக்கொண்டார்கள். ஆனால், தற்போது உப்பிய வயிற்றுடனான புகைப்படங்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு எல்லோரையும் இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார். 

View this post on Instagram

I see the weekend ☔️ In love with this colour and the outfit? ? @chiquestudio @viralmantra


Advertisement

A post shared by Anita H Reddy (@anitahassanandani) on

அனிதாவுடன் நடிக்கும் ஸ்மிருதி கன்னா, ரிதிமா பண்டிட், மற்றும் முக்தி மோகன் ஆகியோர் ”நீங்கள் அனைவரையும் முட்டாளாக்கினீர்கள். மகிழ்ச்சியுடன் முட்டாள் ஆக்கப்பட்டோம்’ என்று தெரிவித்துள்ளார்கள்.

 
 

நடிகை அனிதாவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 5 மில்லியன் ஃபாலோயர்ஸ் பிந்தொடர்ந்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர், கர்ப்பிணி என்பதை அறிவித்த பதிவுக்கு மட்டுமே இதுவரை நான்கு கோடி மக்கள் லைக் செய்துள்ளார்கள்.

 

 

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement