‘வெற்றி பாதைக்கு திரும்ப இந்த மாற்றங்களை செய்யுங்கள்’ சிஎஸ்கேவுக்கு பிராட் ஹாக் அட்வைஸ்

CSK-should-have-made-these-changes-in-the-PLAYING-eleven-AGAINST-SRH-SAYS-Brad-Hogg

முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு நடப்பு ஐபிஎல் சீசனில் புள்ளிப்பட்டியலில் பின் தங்கியுள்ளது தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. 


Advertisement

image

அடுத்த சுற்று வாய்ப்பை உயிர்ப்போடு வைக்க சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியுடனான ஆட்டத்தில் சென்னை வென்றாக வேண்டுமென்ற காட்டயத்தோடு விளையாட உள்ளது. 


Advertisement

இந்த சூழலில் சென்னை அணியின் ஆடும் லெவனில் சில மாற்றங்களை செய்தால் வெற்றிப்பாதைக்கு திரும்பலாம் என தனது கருத்தை சொல்லியுள்ளார் ஆஸ்திரேலியாவின் முன்னாள் சுழற் பந்து வீச்சாளர் பிராட் ஹாக்.

image

அவரது யூடியூப் சேனலில் இதனை தெரிவித்துள்ளார்.


Advertisement

“பின்வரிசையில் இறங்கி விளையாடும் இடதுகை பேட்ஸ்ட்மேனான சாம் கர்ரனை மூன்றாவது பேட்ஸ்மேனாக நெம்பர் 3 பொசிஷனில் களம் இறக்க வேண்டும். பல டி20 தொடர்களில் சாம் கர்ரன் அந்த இடத்தில் இறங்கி விளையாடியுள்ளார். 

image

மேலும் பிராவோவுக்கு மாற்றாக சுழற் பந்து வீச்சாளர் இம்ரான் தாஹிருக்கு ஆடும் லெவனில் வாய்ப்பு கொடுக்க வேண்டும். 

image

அதே போல தமிழக வீரர் ஜெகதீசனுக்கு தொடர்ந்து வாய்ப்பு கொடுக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார் ஹாக்.   

சென்னை அணி 7 போட்டிகளில் 2 வெற்றியை மட்டுமே பதிவு செய்துள்ளது. பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற அடுத்து விளையாடவுள்ள போட்டிகளில் சிறப்பாக விளையாடியாக வேண்டும். 

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement