இங்கிலாந்தில் மீண்டும் கோரத்தாண்டவமாடும் கொரோனா.. மூன்றடுக்கு ஊரடங்கு அமல்..

UK-unveils-3-level-COVID-19-lockdown-plan
இங்கிலாந்தில் கொரோனா மீண்டும் கோரத் தாண்டவமாடி வரும் நிலையில் அங்கு மூன்றடுக்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
 
இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன், நாடாளுமன்றத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதன்படி தொற்றால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நடுத்தரம், அதிக அளவு, மிக அதிக அளவு என மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது.
 
image
 
மிக அதிக அளவு பிரிவாக அறிவிக்கப்பட்ட பகுதிகளில் வீட்டிற்குள் விருந்தினர்களை தங்க வைக்கவோ, அல்லது நண்பர்களின் வீட்டிற்கு செல்லவோ தடை செய்யப்பட்டுள்ளது.
 
நடுத்தர அளவில், வேலைகளை பொறுத்த அளவில், முடிந்தால் வீட்டிலிருந்து வேலை செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 
அதிக அளவு பிரிவில் திருமண நிகழ்ச்சி, இறுதிச் சடங்கு ஊர்வலத்தில் அதிகபட்சமாக 30 பேர் மட்டுமே கூடுவதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
 
இது தவிர பல்வேறு புதிய கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. புதிய கட்டுப்பாடுகளை கொண்டுவருவதில் எவ்வித மகிழ்ச்சியும் இல்லையென்றும், ஆனால் அரசாங்கம் உயிர்களை காப்பாற்ற தீவிரமாக இயங்க வேண்டியுள்ளது என பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறி உள்ளார்.
 
இந்த கட்டுப்பாடுகள் நாடு முழுமைக்கும் ஆறு மாதக் காலத்திற்கு பொருந்தும் என்றும் 28 நாட்களுக்கு ஒரு முறை விதிமுறைகள் மறுபரிசீலனை செய்யப்படும் என்றும் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.
 
 
 
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement