'மூளைவளர்ச்சி' இல்லாத கட்சி என குஷ்பு கூறியதற்கு மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பு கண்டனம்

The-Federation-of-Persons-with-Disabilities-condemned-Kushboo-statement

'மூளை வளர்ச்சி' இல்லாத கட்சி காங்கிரஸ் என நடிகை குஷ்பு கூறியதற்கு மாற்றுத் திறனாளிகள் கூட்டமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது


Advertisement

டெல்லி சென்ற குஷ்பு நேற்று, பாஜகவில் இணைந்தார். இந்நிலையில் இன்று விமானம் மூலம் சென்னை வந்த அவருக்கு பாஜகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் சென்னை கமலாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார். “இருக்கிற இடத்தில் விஸ்வாசம் காட்டி வந்தேன்.

image


Advertisement

எதிர்க்கட்சியில் இருந்ததால் ஆளுங்கட்சியை எதிர்த்தேன். வேளாண் சட்டம், ஜிஎஸ்டி உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை ஆரம்பித்ததே காங்கிரஸ்தான். ஆனால் இப்போது அதை பாஜக நிறைவேற்றும்போது ஏன் எதிர்க்க வேண்டும். ஒரு திட்டத்தை எதிர்க்க வேண்டுமென்றால் அதற்கான தீர்வையும் கொடுக்க வேண்டும். ஆனால் அதை செய்வதில்லை எனத் தெரிவித்தார். மேலும், காங்கிரஸ் கட்சி மூளைவளர்ச்சி இல்லாத கட்சி எனத் தெரிவித்தார்.

இந்நிலையில் 'மூளைவளர்ச்சி' இல்லாத கட்சி காங்கிரஸ் என நடிகை குஷ்பு கூறியதற்கு மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது. மூளை வளர்ச்சி இல்லாதவர்களை சிறுமைப்படுத்துவது கண்டனத்திற்குரியது எனத் தெரிவித்துள்ளது.

 


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement