[X] Close >

கிரண் பேடியை திரும்பப் பெறக் கோரி 1000 பேர் உண்ணாவிரதம்

protest-against-kiranbedi

துணைநிலை ஆளுநரை திரும்ப பெற வலியுறுத்தி புதுச்சேரியில் நடைபெற்ற உண்ணாவிரதத்தில் ஆயிரத்துக்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர். 


Advertisement

புதுச்சேரியில் துணைநிலை ஆளுநருக்கும், முதலமைச்சர் நாராயணசாமிக்கும் இடையே மோதல் நாளுக்கு நாள் வலுத்து வருகிறது. நியமன எம்எல்ஏக்கள் விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், துணைநிலை ஆளுநருக்கு எதிராக காங்கிரஸ் கட்சி சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. கிரண் பேடியை மத்திய அரசு திரும்ப பெற வலியுறுத்தி நடைபெற்ற உண்ணாவிரதத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இதனிடையே, சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய துணைநிலை ஆளுநர் கிரண் பேடி, சட்டமன்ற நியமன உறுப்பினர்கள் விவகாரத்தை ஆளும் காங்கிரஸ் கட்சி அரசியலாக்க முயற்சிப்பதாக குற்றம்சாட்டினார். மேலும் மாநில அரசு மக்கள் நலனில் மட்டுமே அக்கறை செலுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.


Advertisement

வீடியோ

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close